கடன்வாங்கிவிட்டு கம்பிநீட்டும் தொழிலபதிர்களின் கனிவான கவனத்திற்கு!

 

கடன்வாங்கிவிட்டு கம்பிநீட்டும் தொழிலபதிர்களின் கனிவான கவனத்திற்கு!

வங்கிகளின் கடன்வாங்கிவிட்டு, திருப்பிச் செலுத்தாமல் கம்பி நீட்டும் எண்ணமுள்ளவர்களை பிடிப்பதற்காக 83 லுக்-அவுட் நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.

வழக்கமாக லுக்-அவுட் நோட்டீஸ்கள் வழக்குகளில் சிக்கி, வெளிநாடு தப்ப நினைப்பவர்களுக்காக பிறப்பிக்கப்படும்.  லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டவர்கள், வெளிநாடு செல்ல முயற்சிக்கும்போது விமான நிலையங்களில் குடிபெயர்வுத்துறை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்படுவார்கள். அதேப்போல, வங்கிகளின் கடன்வாங்கிவிட்டு, திருப்பிச் செலுத்தாமல் கம்பி நீட்டும் எண்ணமுள்ளவர்களை பிடிப்பதற்காக 83 லுக்-அவுட் நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.

Vijay Mallya & Nirav Modi

அரசுத்துறைகளின் செயலர், துணைச் செயலர், கூடுதல் செயலர் பொறுப்பு வகிப்பவர்கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், இண்டர்போல் அதிகாரிகள், சிபிஐ, அமலாக்கத்துறை மாதிரியான விசாரணை மற்றும் புலனாய்வு அமைப்புகளின் உயரதிகாரிகள், பொதுத்துறை வங்கிகளின் தலைவர்கள் அல்லது தலைமை நிர்வாகிகள், குற்றவியல் நீதிபதிகள் ஆகியோர் கேட்டுக்கொள்வதன் அடிப்படையில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்படும். “வங்கிகளில் கடன்வாங்கிவிட்டு, கம்பிநீட்டுவதற்காக வரிசையில் யாரும் வரவேண்டாம், கொத்தோடு அள்ளிக்கொண்டுப்போக காவல்துறை காத்திருக்கிறது” என விமான நிலையங்களில் எச்சரிக்கை அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.