கடந்த மாதம் சளி, காய்ச்சல் இருந்தவர்களுக்கும்.. தமிழக அரசின் அதிரடி முடிவு!

 

கடந்த மாதம் சளி, காய்ச்சல் இருந்தவர்களுக்கும்.. தமிழக அரசின் அதிரடி முடிவு!

நாடு முழுவதும் 18,601 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 590 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் 18,601 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 590 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 3,252 பேர் குணமடைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டோரின் விகிதம் குறைந்து வருவதாகவும் மத்திய மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் 1520 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 300க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா சமூக தொற்று இல்லை என்றும் 46, 985 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

ttn

இந்நிலையில் ஒரு மாதத்துக்கு முன்னர் யாருக்கெல்லாம் சளி, காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறி இருந்ததோ அவர்களுக்கும் பரிசோதனை செய்ய அரசு முடிவெடுத்துள்ளதாக பொது சுகாதார துறை இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார். மேலும்,  கண்டைன்மெண்ட் பகுதிகள் மட்டுமில்லாமல் மற்ற பகுதிகளிலும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவெடுக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.