கடந்த ஜனவரியில் 2 சதவீதம் வளர்ச்சி….. நம்பிக்கை கொடுத்த தொழில்துறை உற்பத்தி….. தப்பியது மத்திய அரசு…

 

கடந்த ஜனவரியில் 2 சதவீதம் வளர்ச்சி….. நம்பிக்கை கொடுத்த தொழில்துறை உற்பத்தி….. தப்பியது மத்திய அரசு…

கடந்த ஜனவரியில் தொழில்துறை உற்பத்தி 2 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. 2019 டிசம்பரில் தொழில்துறை உற்பத்தி 0.3 சதவீதம் குறைந்து இருந்தது.

பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பி விட்டதாக பிரதமர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் கடந்த பல மாதங்களாக கூறி வந்தனர். ஆனால் அதற்கு எதிர்மாறாக 2019 டிசம்பரில் தொழில்துறை உற்பத்தி 0.3 சதவீதம் குறைந்தது. இதனையடுத்து எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக சாடின. இந்நிலையில் 2020 ஜனவரி மாத தொழில்துறை உற்பத்தி புள்ளிவிவரம் மத்திய அரசுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. 

சுரங்க பணிகள்

தொடர்ந்து 2வது மாதமாக கடந்த ஜனவரியிலும் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி வளர்ச்சி கண்டது. அந்த மாதத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 2.2 சதவீதம் வளர்ச்சி கண்டது. 
இதனால் அந்த மாதத்தில் தொழில்துறை உற்பத்தியும் அதிகரித்துதான் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியை கணக்கிடுவதில் முக்கிய 8 துறைகளின் பங்கு 40 சதவீதம் உள்ளது. அதனால் முக்கிய 8 துறைகளின் வளர்ச்சி குறைந்தாலும், ஏற்றம் கண்டாலும் அதன் தாக்கம் தொழில்துறை உற்பத்தியில் வெளிப்படும்.

தொழிற்சாலை

கடந்த ஜனவரி மாத தொழில்துறை உற்பத்தி குறித்து புள்ளிவிவரத்தை மத்திய புள்ளியியல் அலுவலகம் நேற்று வெளியிட்டது. எதிர்பார்த்தது போலவே 2020 ஜனவரியில் தொழில்துறை உற்பத்தியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 2 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. 2012 டிசம்பரில் தொழில்துறை உற்பத்தி 0.3 சதவீதம் குறைந்து இருந்தது. மேலும் 2019 ஜனவரியில் தொழில்துறை உற்பத்தி 1.9 சதவீதம் வளர்ச்சி கண்டு இருந்தது.