கஜோலின் தங்கை பிறந்தநாள் கொண்டாட்டம்: இளமைக்கால புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து கூறிய அக்கா

 

கஜோலின்  தங்கை பிறந்தநாள் கொண்டாட்டம்: இளமைக்கால புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து கூறிய அக்கா

எந்த படத்திலும் தமிழில் நடிக்கவில்லை.  இதுதவிர பாலிவுட், டோலிவுட்டிலும் தனீஷா நடித்துள்ளார். 

நடிகை கஜோலின் தங்கையான தனீஷா முகர்ஜி தமிழில் உன்னாலே உன்னாலே படத்தில் நடித்திருந்தார். வினய், சதா நடித்த இப்படத்தில் துறுதுறுபெண்ணாக நடித்து அசத்தியிருப்பார். இருப்பினும் அதன் பிறகு அவர் எந்த படத்திலும் தமிழில் நடிக்கவில்லை.  இதுதவிர பாலிவுட், டோலிவுட்டிலும் தனீஷா நடித்துள்ளார். 

ttn

இந்நிலையில் தனீஷா முகர்ஜி தனது 42 வது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடினார். ரிசார்ட்டில் நடந்த இவரது பிறந்தநாள் பார்ட்டியில் அவரது தாய் மற்றும் நண்பர்கள்  கலந்துகொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

தங்கையின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சில தவிர்க்க முடியாத காரணத்தால் கலந்துகொள்ள முடியாத கஜோல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இருவரின்  இளமைக்கால  புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.

 இதற்கு   தனீஷா முகர்ஜி தனது நன்றி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.