கஜா புயல்: முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வைரமுத்து நன்கொடை

 

கஜா புயல்: முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வைரமுத்து நன்கொடை

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு கஜா புயல் நிவாரண பணிகளுக்காக 5 லட்சம் நன்கொடையை கவிஞர் வைரமுத்து வழங்கியுள்ளார்.

சென்னை: முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு கஜா புயல் நிவாரண பணிகளுக்காக 5 லட்சம் நன்கொடையை கவிஞர் வைரமுத்து வழங்கியுள்ளார்.

வங்க கடலில் உருவான கஜா புயல் நாகப்பட்டினத்துக்கும், வேதாரண்யத்துக்கும் இடையே கரையை கடந்த போது தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை உருக்குலையச் செய்துள்ளது. ஏராளமானோர் வீடுகளை இழந்து தண்ணீருக்கும், உணவுக்கும் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட தற்போது வரை முழுமையாக சென்றடையவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்ப்பிணிப் பெண்கள், மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் பெண்கள், அவர்களுக்கு உதவ முடியாத கையறு நிலையில் ஆண்கள் என டெல்டா மக்கள் பெரும் சிரமத்தில் இருந்து வருகின்றனர்.

தமிழக அரசும் முழுமையான அளவிற்கு நிவாரண பணிகளை மேற்கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர். டெல்டா மக்களுக்கு கைகொடுக்கும் விதமாக, பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு கவிஞர் வைரமுத்து, 5 லட்சம் ரூபாய் பணத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.