கஜா புயல் நிவாரணம்: தன் ஒரு மாத சம்பளத்தை முதல்வரிடம் வழங்கிய ஆளுநர்!

 

கஜா புயல் நிவாரணம்: தன் ஒரு மாத சம்பளத்தை முதல்வரிடம் வழங்கிய ஆளுநர்!

கஜா புயல் நிவாரண நிதிக்காக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தன் ஒரு மாத சம்பளத்தை வழங்கியுள்ளார்.

சென்னை: கஜா புயல் நிவாரண நிதிக்காக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தன் ஒரு மாத சம்பளத்தை வழங்கியுள்ளார்.

கஜா புயலால் பெரும் அளவு சேதத்தை சந்திருக்கும் டெல்டா மாவட்டங்களை சீர் செய்வதற்காக, முதற்கட்டமாக 1000 கோடி ரூபாய் நிதியைத் தமிழக அரசின் கஜானாவில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒதுக்கினார்.

அந்த பணத்தை கொண்டு, நிவாரண பணிகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. அதன்பின், திமுக சார்பில் ஒரு கோடி ரூபாயும், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் ஒரு கோடி ரூபாயையும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பாகவும், தொழிலதிபர்கள் சார்பாகவும் தற்போது வரை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதிகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தன் நவம்பர் மாத சம்பளமான 3.5 லட்ச ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.