கஜா புயல் எத்தனை உயிர்களை காவு வாங்கியுள்ளது தெரியுமா?

 

கஜா புயல் எத்தனை உயிர்களை காவு வாங்கியுள்ளது தெரியுமா?

தமிழகம் முழுவதும் கஜா புயல் பாதிப்பினால் பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை: தமிழகம் முழுவதும் கஜா புயல் பாதிப்பினால் பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த கஜா புயலானது, நேற்றிரவு 11 மணியளவில் தமிழகத்தின் கடலோரத்தைத் தொட்டது. நள்ளிரவு 12.30 மணியளவில் ஆக்ரோஷமாக கரையைக் கடக்க தொடங்கியது. இது சுமார் 6 மணி நேரம் நடைபெறும் என கணிக்கப்பட்டிருந்தது. 

அந்த நேரத்தில், வேதாரண்யம் – நாகை இடையே 12.30 மணி முதல் 2.30 மணி வரை மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் மிக பலத்த சூறாவளிக் காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.

இதனால் பெரும் சேதங்கள் ஏற்படக்கூடும் என முன்கூட்டியே கணிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு சிறப்பான முறையில் மேற்கொண்டிருந்தது.

இருப்பினும், கஜா புயலில் கோரத் தாண்டவத்திற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருக்கிறது. காலை 11 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 14 பேர் உயிரிழந்ததாக தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி கஜா புயலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு 1 லட்ச ரூபாயும் நிவாரண நிதியாக வழங்கிட முதலமைச்சர் பழனிசாமி  உத்தரவிட்டுள்ளார். 

கஜா புயலின் தாக்கம் குறித்த வீடியோ: