கஜா புயல் எதிரொலி: களத்தில் இறங்கிய ரஜினி மக்கள் மன்றம்!

 

கஜா புயல் எதிரொலி: களத்தில் இறங்கிய ரஜினி மக்கள் மன்றம்!

கஜா புயலின் காரணமாக  பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரஜினி மக்கள் மன்றத்தினர் உணவு சமைத்து கொடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்: கஜா புயலின் காரணமாக  பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரஜினி மக்கள் மன்றத்தினர் உணவு சமைத்து கொடுத்துள்ளனர்.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது. தமிழகத்தை நோக்கி வந்த இந்தப் புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டது. இந்தப் புயலானது, இன்று அதிகாலை 3.30 மணியளவில் நாகை, வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. 

புயல் கரையை கடந்த நேரத்தில் நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. பலத்த புயல் காற்று வீசியதால் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. குடிசை வீடுகள் பல காற்றில் பறந்த நிலையில் மின்கம்பங்களும் ஆங்காங்கே சாய்ந்து விழுந்துள்ளன. தொலைத்தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சார விநியோகமும் தடை செய்யப்பட்டுள்ளது. ஏராளமான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

rajini

இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரஜினி மக்கள் மன்றத்தினர் உணவு சமைத்து கொடுத்துள்ளனர். மயிலாடுதுறையில் புயலின் பாதிப்பை உணர்ந்த மக்கள் தங்களால் முடிந்த உணவுகளைச் சமைத்து அதனைப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கினர்.