”கஜா” புயலால் வடதமிழகம் பாதிக்கப்படும்: வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால்

 

”கஜா” புயலால் வடதமிழகம் பாதிக்கப்படும்: வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால்

கஜா புயல் காரணமா வடதமிழக பாதிக்க வாய்ப்பு இருப்பதாக வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் கூறியுள்ளார்.

நெல்லை: கஜா புயல் காரணமா வடதமிழக பாதிக்க வாய்ப்பு இருப்பதாக வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் கூறியுள்ளார்.

அந்தமான் கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தாய்லாந்து நாட்டால் ”கஜா” என்று பெயரிடப்பட்டு இருக்கும் இந்த புயல் வரும் 16-ம் தேதி வரும் 16 ஆம் தேதி கடலூர் பரங்கிப்பேட்டையில் கரையை கடக்கும் என்று ஐரோப்பிய வானியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழையோ அல்லது கனமழையோ பெய்யும் எனவும் இது வர்தா புயல் போன்று பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், கஜா புயலால் வடதமிழகத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. புயலை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மீனவர்கள் 12-ம் தேதி மாலைக்குள் கரை திரும்ப வேண்டும். கரை திரும்ப முடியாத மீனவர்கள் துறைமுகங்களில் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.