கஜாவுக்கான நிதியை தமிழக அரசால் பெற முடியவில்லை: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

 

கஜாவுக்கான நிதியை தமிழக அரசால் பெற முடியவில்லை: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

கஜாவுக்கான நிவாரண நிதியை மத்திய அரசிடமிருந்து தமிழக அரசால் பெற முடியவில்லை என சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்த பின் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

சென்னை: கஜாவுக்கான நிவாரண நிதியை மத்திய அரசிடமிருந்து தமிழக அரசால் பெற முடியவில்லை என சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்த பின் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கூட்டத்தின் தொடக்கத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரை நிகழ்த்தினார். ஆனால் அதனை எதிர்க்கட்சியான திமுக புறக்கணித்து அவையிலிருந்து வெளிநடப்பு செய்தது. அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசு செயலிழந்து கிடக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை, கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தமிழக அரசு தோல்வியடைந்துள்ளது. 

கஜா புயல் நிவாரணத்திற்கு மத்திய அரசு போதிய நிதி வழங்கவில்லை. பெற முடியாத நிலையில் மாநில அரசு உள்ளது. குட்கா ஊழல் உள்ளிட்ட புகார்களில் சிக்கியுள்ள விஜயபாஸ்கர்கள் பதவி விலகியிருக்க வேண்டும்.ஜெயலலிதா மரணத்தில் சிபிஐ விசாரணை வேண்டுமென்று அமைச்சர் சி.வி சண்முகம் தற்போது பேசி இருக்கிறார். ஆனால் இதனை திமுக முன்னரே வலியுறுத்தி இருந்தது என்றார்.