கச்சத்தீவு திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடக்கம்.. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு 2,900 பேர் பயணம்!

 

கச்சத்தீவு திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடக்கம்.. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு 2,900 பேர் பயணம்!

முந்தைய காலத்தில் இந்தியாவுடன் இருந்த கச்சத்தீவு இந்திய அரசால் இலங்கைக்கு கொடுக்கப்பட்டது.

முந்தைய காலத்தில் இந்தியாவுடன் இருந்த கச்சத்தீவு இந்திய அரசால் இலங்கைக்கு கொடுக்கப்பட்டது. அதனால் அங்கிருந்த புனித அந்தோணியார் கோவிலும் இலங்கைக்கு சொந்தமானதாக மாறியது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொள்வர். தமிழகத்திலிருந்தும் பலர் சென்று திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.

ttn

இந்த ஆண்டு  புனித அந்தோணியார் கோவில் திருவிழா இன்று தொடங்கி நாளை வரை நடைபெற உள்ளது. அங்கு இன்று மாலை சரியாக 6 மணிக்குக் கொடியேற்றப்படும். அதன் பிறகு, திருச்சிலுவை ஆராதனையும் சிலுவைப்பாதை நிகழ்ச்சியும் நடைபெறும்.அதனைத்தொடர்ந்து இன்று இரவே  சிறப்பு  திருப்பலி மற்றும் அந்தோணியார் தேர் பவனி நடைபெறும்.

ttn

மேலும், நாளை காலை வழிபாடு முடிந்தவுடன் திருப்பலியுடன் திருவிழா நிறைவுக்கு வரும். இதில் கலந்து கொள்வதற்காக ராமேஸ்வரத்திலிருந்து 74 விசைப்படகுகள் மற்றும் 24 நாட்டுப் படகுகளில் 2,900 பேர் சென்றுள்ளனர்.