கசாப்புக் கடையில் கண்ணீர்விட்ட எருமைக்கு உயிர்ப்பிச்சை ! எருமை கதறி அழும் வீடியோ வைரல் !

கசாப்புக் கடையில் கண்ணீர்விட்ட எருமைக்கு உயிர்ப்பிச்சை ! எருமை கதறி அழும் வீடியோ வைரல் !

என்னைக் கொல்ல வேண்டாம் என எருமை மாடு ஒன்று கண்ணீர் மல்கக் கேட்டுக் கொண்டதால் கசாப்பு கடைக்காரர் மனம் மாறிய சம்பவம் சீனாவில் நடைபெற்றுள்ளது.

என்னைக் கொல்ல வேண்டாம் என எருமை மாடு ஒன்று கண்ணீர் மல்கக் கேட்டுக் கொண்டதால் கசாப்பு கடைக்காரர் மனம் மாறிய சம்பவம் சீனாவில் நடைபெற்றுள்ளது.

bufalo

சீனாவின்  குவாங்டாங் மாகாணம் சாந்தோ பகுதியில் ஒரு இறைச்சிக் கடை உள்ளது. கடந்த ஞாயிறன்று எருமை மாடு கொல்லப்படுவதற்காக லாரியில் இருந்து கீழே இறக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து கசாப்பு கடைக்கு உரிமையாளர் முயற்சித்தபோது முடியவில்லை. காரணம் அந்த எருமை மாடு அழத் தொடங்கிவிட்டது. முட்டிப்போட்டு அமர்ந்தபடியே உரிமையாளரிடம் என்னை கொல்ல வேண்டாம் என கெஞ்சுவது போல் அமர்ந்து கொண்டது. அடுத்த சில நிமிடங்களில் எருமை மாட்டை கொல்ல வேண்டிய சூழ்நிலையில் கசாப்பு கடைக்காரர் என்ன செய்வதன்று தெரியாமல் தவித்தார். லாரியில் இருந்து இறங்கிய மாடு எதிரே இருந்த கசாப்பு கடையை பார்த்து பயந்துபோனது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னங்காலை மடக்கி கண்ணீருடன் உயிர்பிச்சை கேட்கும் வீடியோ பார்ப்போரின் மனதை நெகிழவைத்துள்ளது. இதையடுத்து அந்த மாட்டை நல்ல சமாரியர்களின் குழு ரூ. 2.5லட்சம்த்துக்கு வாங்கிக் கொண்டது. பின்னர் மாடு புத்த கோவிலில் விடப்பட்டது. கோவில் நிர்வாகமும் ஏற்றுக் கொண்டது.