கக்கூஸ் போகவும் கட்டுப்பாடா! அதிர்ச்சி கொடுக்க காத்திருக்குக்கிறது மத்திய அரசின் ஆய்வு !?

 

கக்கூஸ் போகவும் கட்டுப்பாடா! அதிர்ச்சி கொடுக்க காத்திருக்குக்கிறது மத்திய அரசின் ஆய்வு !?

வங்கியில் இருப்பது உங்கள் பணம்தான்,ஆனால்,மாதம் ஐந்து முறைக்கு மேல் எடுத்தால் ஃபைன் போட்டது போல நீங்க பாத் ரூம் போக அரசாங்க அனுமதி கேட்க வேண்டிய நேரம் நெருங்குகிறது!

வங்கியில் இருப்பது உங்கள் பணம்தான்,ஆனால்,மாதம் ஐந்து முறைக்கு மேல் எடுத்தால் ஃபைன் போட்டது போல நீங்க பாத் ரூம் போக அரசாங்க அனுமதி கேட்க வேண்டிய நேரம் நெருங்குகிறது!

மத்திய அரசின் தண்ணீர் கமிட்டியின் சமீபத்திய அறிக்கை அதைத்தான் சொல்கிறது.இதோ அந்த அறிக்கை.

குளிக்க : ஷவரில் ஒருவர் குளிக்க 100 லிட்டர் தண்ணீர் தேவைப்படும், ஆனால் பக்கெட்டில் பிடித்து வைத்து குளித்தால் 18 லிட்டர்தான்.82 லிட்டர் மிச்சம்.

shower

 

டாய்லெட் போக :நீங்கள் ஒரு முறை ஆய் போய்விட்டு ஃப்ளஷை அமுக்கினால்,20 லிட்டர் தண்ணீர் கொட்டுகிறது.வாளியில் பிடித்து ஊற்றினால் 6 லிட்டர்தான்.14 லிட்டர் மிச்சம்.

toilet

 

துணி துவைக்க :குழாயைத் திறந்துவிட்டுத் துணி துவைத்தால் 116 லிட்டர் செலவாகும்.பக்கெட்டில் பிடித்து வைத்து அலசினால் 36 லிட்டர்தான் செலவு.
86 லிட்டர் லாபம்.

wash

 

ஷேவிங் :வாஷ்பேசின் முன்னால் நின்றுகொண்டு,பைப்பை திறந்து விட்டபடி ஷேவ் செய்தால் 5 லிட்டர் தண்ணீர் செலவு.ஒரு மக்கில் பிடித்து வைத்துக்கொண்டு ஷேவ் செய்தால் அரை லிட்டர் போதும்.4 ½ லிட்டர் மிச்சம்.

shave

 

பல் தேய்க்க :ஷேவிங் செயவது போலவே வாஷ் பேசின் பைப்பை திறந்து விட்டுவிட்டு பல் தேய்த்தால் 5 லிட்டர் தண்ணீர் வேண்டும் பைப்பை மூடிவிட்டு பல்தேய்த்தால் ¾ லிட்டர்தான் தேவைப்படும். 4 ¼ லிட்டர்  லாபம்.

tee

 

கார் கழுவ :தண்ணீர் ஹோசைத் திறந்து பிடித்து காரை கழுவ 100 லிட்டர் நீர் தேவைப்படும். ஒரு பக்கெட்டில் இருக்கும் 18 லிட்டர் நீரில் இரண்டு மூன்று  கார்களைக்கூட கழுவமுடியும்.

car wash

 

தொட்டிச் செடிகளுக்கு நீர் விட :ஹோஸ் மூலம் நீர் விட்டால் 50 லிட்டர் தேவைப்படும், பக்கெட்டில் பிடித்து ஊற்றினால் 10 லிட்டரே அதிகம்.

pot

 

தோட்டத்து செடிகளுக்கு நீர் பாய்ச்ச :ஹோசை பயன்படுத்தி நீர் விட்டால் 100 லிட்டருக்கு மேல் தேவைப்படும். சொட்டு நீர்ப்பாசனம் செய்தால் 20 அல்லது 30 லிட்டர் போதும்.

garden

இதன்படி நடந்தால்,ஒவ்வொரு குடும்பமும் , ஒரு நாளைக்கு 300 லிட்டர் நீரை சேமிக்கலாம்.என்று சொல்கிறது அந்த ஆய்வு அறிக்கை! அடுத்த முப்பது ஆண்டுகளில் உலகமே தண்ணீர் பிரச்சினையால் கடுமையான விளைவுகளை சந்திக்கவிருக்கிறது.இது போன்ற எச்சரிக்கை இப்போது அவசியமானதுதான் ! நிலத்தடி நீரை கார்ப்பரேட்டுகள் ரத்தத்தை உறிஞ்சுவது போல் உறிஞ்சுகிறார்களே; அவர்களுக்கும் இந்த எச்சரிக்கை பொருந்துமா !

இதையும் வாசிங்க

தானாக வந்து மும்பை இளைஞருக்கு வேலை கொடுத்த கூகுள் – சம்பளம் எவ்வளவு தெரியுமா?