ஓ மை கடவுளே படத்திற்கு அடித்த ஜாக்பாட்… உற்சாகத்தில் திளைக்கும் படக்குழு!

ஓ மை கடவுளே படத்திற்கு அடித்த ஜாக்பாட்… உற்சாகத்தில் திளைக்கும் படக்குழு!

காதலர் தினத்தன்று வெளியான ‘ஓ மை கடவுளே’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த  அறிமுக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கியிருந்தார். இப்படத்தில் நடிகர் அசோக் செல்வன், ரித்விகா சிங் , வாணி போஜன் மற்றும் விஜய் சேதுபதியும் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சீரியல் பிரபலம் வாணி போஜன் படத்தில் இருந்தது படத்திற்கு மேலும் வலு சேர்த்தது.

oh-my-kadavule-09

திரையங்குகளில் வெற்றிகரமாக ஓடிய ஓ மை கடவுளே படத்தின் தமிழக திரையரங்கு வசூல் மட்டும் சுமார் பத்துகோடியாம். அதேபோல்,  படத்தின் தொலைக்காட்சி உரிமையும் மூன்றரை கோடிக்கு விற்பனை ஆகியுள்ளதாம். மேலும் தெலுங்கு உரிமை சுமார் இரண்டு கோடிக்கு விற்பனையாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால்  தயாரிப்பாளருக்கு கோடிகளில் லாபம் கிடைத்திருக்கிறது என்று கூறப்படுகிறது.

oh-my-kadavule-98

இந்த  படத்தின் இந்தி உரிமைக்கு கடும் போட்டி நடக்கும் நிலையில் படத்தின் தயாரிப்பாளர் டில்லிபாபுவே இந்தியிலும் தயாரிக்க முடிவெடுத்துள்ளாராம். இனி இயக்குனர் பெரிய ஹீரோக்களை வைத்து படமெடுக்க திட்டம் போடலாம்!