ஓவியா ஆர்மி தம்பிங்களா உங்க யூனிஃபார்ம் எடுத்து ரெடியா வைங்கப்பா…

 

ஓவியா ஆர்மி தம்பிங்களா உங்க யூனிஃபார்ம் எடுத்து ரெடியா வைங்கப்பா…

பிக் பாஸ் முதல் சீசனில் அனைத்து மக்களின் ஆதரவும் பெற்றாலும்,  காதல் பிரச்சினை காரணமாக திடீர் என வெளியேறியவர் நடிகை ஓவியா

தனது ‘களவாணி2’ பட புரமோஷனுக்காக நடிகை ஓவியாவும், அவரது படக் காதலர் விமலும் பிக்பாஸ் இல்லத்துக்கு வெகுவிரைவில் விருந்திரகளாக வரவிருப்பதாக தகவல்கள் வருகின்றன. எனவே முன்னாள் ஓவியா ஆர்மி மெம்பர்கள் ஒருநாள் டூட்டிக்கு தயாராக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

oviya

பிக் பாஸ் முதல் சீசனில் அனைத்து மக்களின் ஆதரவும் பெற்றாலும்,  காதல் பிரச்சினை காரணமாக திடீர் என வெளியேறியவர் நடிகை ஓவியா.  இதைத்தொடர்ந்து அவரை மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வர வைக்க முயற்சிகள் செய்தும் அது முடியாமல் போனது. அதனால் மெல்ல ஓவியா ஆர்மியும் ஓய்வெடுத்துக்கொண்டது.

kalavani

இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக வருவது போல் உள்ளே வந்து பிராங்க் செய்துவிட்டு பின் வெளியேறினார்.  இதைத் தொடர்ந்து, தற்போது மூன்றாவது சீசனிலும் ஓவியா பிக் பாஸ்  வீட்டிற்குள் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.ஆனால் போட்டியாளராக இல்லாமல் ‘களவாணி 2 ‘ படத்தின் ப்ரமோஷனுக்காக நடிகர் விமல் மற்றும் ஓவியா இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. ‘களவாணி2’படத்தின் ரிப்போர்ட் பரவாயில்லை என்றாலும் தியேட்டர் பக்கம் மக்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதால் இந்த புரமோஷன் ஏற்பாடு என்று தகவல்.