ஓவியாவின் 90ml திரைப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியானது!

 

ஓவியாவின் 90ml திரைப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியானது!

ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள 90ml திரைப்படத்துக்குத் தணிக்கை குழு  A சான்றிதழ் வழங்கியுள்ளது.

சென்னை: ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள 90ml திரைப்படத்துக்குத் தணிக்கை குழு  A சான்றிதழ் வழங்கியுள்ளது.

களவாணி,கலகலப்பு 2,மெரினா போன்ற திரைப்படங்களில் நடித்த ஓவியா திரைப்பட வாய்ப்புகள் இன்றி பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பங்குக்கேற்று தனது நேர்மையான குணத்தின் மூலம் மக்களின் அன்பு மட்டுமின்றி திரைப்பட வாய்ப்புகளும் ஓவியாவுக்கு குவிந்தன.பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் குளிர் 100 டிகிரி திரைப்படத்தை இயக்கிய அனிதா உதீப் இயக்கத்தில் நடிகை ஓவியா நடித்துள்ள திரைப்படம் 90ml. 

இந்நிலையில், பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் 90ml திரைப்படத்துக்கு தணிக்கை குழு  A சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும் படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என்றும் நடிகை ஓவியா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். ஒரு அடல்ட் படத்தில் என்ன மாதிரியான வசனங்கள் இருக்கும் என்பது அனைவரும் அறிந்தது என்பதால் இப்படத்தின் டிரைலருக்கு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் சிம்பு இசையில் இத்திரைப்படத்தில் ஓவியா ஒரு பாடல் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.