ஓவர் நைட்டில் ஒத்தைக்கு ஒத்த பாத்த ‘விஸ்வாசம்’; யூடியூபில் அசத்தல் சாதனை

 

ஓவர் நைட்டில் ஒத்தைக்கு ஒத்த பாத்த ‘விஸ்வாசம்’; யூடியூபில் அசத்தல் சாதனை

தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி செம ட்ரெண்டாகி வருகிறது.

சென்னை: தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி செம ட்ரெண்டாகி வருகிறது.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கியுள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது. இந்நிலையில் தல ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு இடையே இப்படத்தின் டிரைலர் நேற்று பிற்பகல் வெளியாகி சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானது.

‘பேட்ட’ திரைப்படத்தின் டிரைலருக்கு போட்டியாக அதிகரடியாக வெளியாகியுள்ள ‘விஸ்வாசம்’ டிரைலரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இதுவரை எந்த தென்னிந்திய திரைப்படங்களும் யூடியூபில் எட்டாத சாதனையை அஜித்தின் விஸ்வாசம் அசால்ட்டாக எட்டியுள்ளது.

‘விஸ்வாசம்’ டிரைலர் ரிலீசான 9 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்ததுள்ளது. தொடர்ந்து டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ள ‘விஸ்வாசம்’ டிரைலர் சுமார் 10 லட்சம் லைக்ஸ்களை பெற்ற முதல் தென்னிந்திய திரைப்படம் என்ற சாதனையையும் படைட்துள்ளது. சமீபத்தில் வெளியான ‘பேட்ட’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி 24 மணி நேரத்தில் 10 மில்லியனை எட்டியது குறிப்பிடத்தக்கது.

அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ மற்றும் ரஜினிகாந்தின் ‘பேட்ட’ திரைப்படங்கள் பொங்கலுக்கு நேரடியாக மோதவுள்ளதால், தலைவர் மற்றும் தல ரசிகர்களிடையே உச்சக்கட்ட எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.