ஓயாத சர்கார் சர்ச்சை: இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவிகளில் வழக்கு

 

ஓயாத சர்கார் சர்ச்சை: இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவிகளில் வழக்கு

சர்கார் திரைப்படம் தொடர்பாக சமூக ஆர்வலர் அளித்த புகாரின் அடிப்படையில் அப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை: சர்கார் திரைப்படம் தொடர்பாக சமூக ஆர்வலர் அளித்த புகாரின் அடிப்படையில் அப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த திரைப்படம், சர்கார். இப்படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்களை விமர்சித்ததாகவும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இயற்பெயரை கொச்சைப் படுத்தியதாகவும் படக்குழு மீதி அதிமுகவினர் குற்றம் சுமத்தினர்.

அதன் உச்சக்கட்டமாக, சர்கார் திரைப்படம் ஓடிக் கொண்டிருந்த தியேட்டர்கள் மீது வன்முறை செயல்களில் ஈடுபடுவது, பேனர்களை கிழிப்பது உள்ளிட்ட செயல்களில் அதிமுகவினர் ஈடுபட்டனர். 

ஒரு வழியாக இந்த சர்ச்சைகள் ஓய்ந்ததாக கருதப்பட்ட சூழலில், இப்படத்தில் அரசின் இலவச திட்டங்களை தவறாக விமர்சித்துள்ளதாக தேவராஜன் என்பவர் கொடுத்த புகார் மனுவின் அடிப்படையில் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.