ஓட்டுக்கு அரிசி மூட்டை… திருவண்ணாமலையில் அமோக விநியோகம்!

 

ஓட்டுக்கு அரிசி மூட்டை… திருவண்ணாமலையில் அமோக விநியோகம்!

ட்டுப் போட பணம், தங்க நகை, குடம், கறி விருந்து என்றுதான் நம்முடைய வேட்பாளர்கள் கொடுத்துக்கொண்டிருந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஒருவர் அரிசி மூட்டையை வழங்கியுள்ளார். ஆரணி அருகே உள்ள சேவூரில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அ.தி.மு.க-வின் தீபா சம்பத்தும் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு கௌரி ராதாகிருஷ்ணனும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தர்மனும் போட்டியிடுகின்றனர். தேர்தல் தினமான இன்று (30 டிசம்பர்) இவர்களுக்கு சொந்தமான இடத்தில் வாக்காளர்களுக்கு அரிசி மூட்டைகளை வழங்கப்பட்டு வருவதாக தி.மு.க சார்பில் பறக்கும் படைக்கு புகார் அளிக்கப்பட்டது.

திருவண்ணாமலையில் உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்களுக்கு ரூ.1500 மதிப்புடைய அரிசி மூட்டை இலவசமாக வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓட்டுப் போட பணம், தங்க நகை, குடம், கறி விருந்து என்றுதான் நம்முடைய வேட்பாளர்கள் கொடுத்துக்கொண்டிருந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஒருவர் அரிசி மூட்டையை வழங்கியுள்ளார். ஆரணி அருகே உள்ள சேவூரில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அ.தி.மு.க-வின் தீபா சம்பத்தும் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு கௌரி ராதாகிருஷ்ணனும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தர்மனும் போட்டியிடுகின்றனர். தேர்தல் தினமான இன்று (30 டிசம்பர்) இவர்களுக்கு சொந்தமான இடத்தில் வாக்காளர்களுக்கு அரிசி மூட்டைகளை வழங்கப்பட்டு வருவதாக தி.மு.க சார்பில் பறக்கும் படைக்கு புகார் அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பறக்கும் படையினர் வந்து பார்த்தபோது, வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அரிசி விநியோகம் ஜோராக நடந்து வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். வந்திருப்பது யார் என்று தெரியாத ஊழியர்கள், அவர்களைப் பொருட்படுத்தாமல் சிலருக்கு டோக்கன் வாங்கிக்கொண்டு அரிசி வழங்கியுள்ளனர். இவற்றை சில தனியார் தொலைக்காட்சிகள் வீடியோவும் புகைப்படமும் எடுத்துள்ளன. பிறகுதான் இவர்கள் தேர்தல் பறக்கும்படையினர் என்று தெரிந்தது. உடனே, கே.ஆர்.அரிசி ஆலை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் பின் வாசல் வழியாக சுவர் எகிறிக் குதித்துத் தப்பினர். அரிசி வாங்கிய மக்களும் அவசர அவசரமாக வெளியேறினர். அரிசி கிடைக்காமல் செய்துவிட்டார்களே என்று தி.மு.க-வினர் மீது மக்கள் கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.