ஓட்டத்தில் உசேன் போல்ட்டை மிஞ்சிய கன்னட இளைஞர்!

 

ஓட்டத்தில் உசேன் போல்ட்டை மிஞ்சிய கன்னட இளைஞர்!

தமிழகத்தின் ஜல்லிக்கட்டு விளையாட்டைப் போல கர்நாடகத்தில் நடைபெறும் பாரம்பரிய போட்டி கம்பாளா. அறுவடை திருநாளின் ஒரு பகுதியாக ஒரு ஜோடி எருமை மாட்டுடன் இளைஞர்கள் சேற்றில் ஓடும் போட்டி இது.

தமிழகத்தின் ஜல்லிக்கட்டு விளையாட்டைப் போல கர்நாடகத்தில் நடைபெறும் பாரம்பரிய போட்டி கம்பாளா. அறுவடை திருநாளின் ஒரு பகுதியாக ஒரு ஜோடி எருமை மாட்டுடன் இளைஞர்கள் சேற்றில் ஓடும் போட்டி இது.

இந்தப் போட்டியின் போது போட்டியாளர்கள் எருமைகளை ஆணியால் குத்தி வேகமாக ஓட விரட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்து சிலகாலம் தடை செய்யப்பட்ட விளையாட்டு கம்பாளா.தமிழகத்தில் எழுந்த ஜல்லிகட்டு எழுச்சியைத் தொடர்ந்து கர்னாடகாவிலும் கம்பாளா தடையை எதிர்த்து போராட்டம் வெடித்து அங்கும் தனிச்சட்டம் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, இப்போது கம்பாளா விளையாட்டு தொடர்ந்து நடந்து வருகிறது.

srinivas-gowda

இந்த ஆண்டுக்கான கம்பாளா போட்டி துவங்கிவிட்ட நிலையில் நேற்று, தென் கர்நாடகத்தில் உள்ள மூடபித்திரி என்கிற கிராமத்தில் விமரிசையாகப் போட்டி நடந்தது. 250 ஜோடி எருமைகள் போட்டியில் கலந்து கொண்டன. இந்த கம்பாளாவில் ஸ்ரீனிவாச கவுடா என்கிற இளைஞர் தனது எருமை மாடுகளுடன் 142.50 மீட்டர் தூரத்தை 13.62 விநாடியில் கடந்து முதல் பரிசை வென்றார்.இதன் மூலம் கம்பளா போட்டிகளில் கடந்த 30 ஆண்டுகால ரெக்கார்டை முறியடித்திருக்கிறார் ஸ்ரீநிவாஸ். 

இந்தச் செய்தி கன்னட தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதும்,பலரும் இவரை ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீரரான ஹுசேன் போல்ட்டுடன் ஒப்பிட்டு வருகிறார்கள். 142.50 மீட்டர்களை ஸ்ரீநிவாஸ் 13.62 வினாடிகளில் கடந்திருக்கிறார் என்றால்,அவர் 100 மீட்டரை 9.55 வினாடிகளில் கடந்திருக்கிறார்.இதே தூரத்திற்கு உசேன் போல்ட் வைத்திருக்கும் உலக ரெக்கார்டு 9.58 வினாடிகள்.ஆகவே உசேன் போல்டின் சாதனையை ஸ்ரீநிவாஸ கவுடா முறியடித்து விட்டதாகப் பதிவிடுக்கிறார்கள்.