ஓசூரில் புதிய பைக் தொழிற்சாலை.. 4,300 பேருக்கு வேலைவாய்ப்பு : அமைச்சர் சம்பத்

 

ஓசூரில் புதிய பைக் தொழிற்சாலை..  4,300 பேருக்கு வேலைவாய்ப்பு : அமைச்சர் சம்பத்

இன்னும் பல பட்டதாரிகள் வேலை இல்லாமல் கையில் கோப்புகளுடன் சுற்றிக் கொண்டிருக்கின்றனர்.

தமிழகத்தில் வேலையில்லாமல் திண்டாடுபவர்களுக்கா பஞ்சம்.. துப்புரவுப் பணியாளர் வேலைக்குக் கூட ஆயிரக் கணக்கான பட்டதாரிகள் குவிக்கின்றனர். அந்த அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. முதல்வர் வெளிநாட்டுச் சுற்றுப் பயணத்தின் போது பல கோடி ரூபாய்க்கு வெளிநாடுகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் அதன் மூலம் வேலை வாய்ப்பின்மை இருக்காது என்றும் தெரிவிக்கப் பட்டது. ஆனால், இன்னும் பல பட்டதாரிகள் வேலை இல்லாமல் கையில் கோப்புகளுடன் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். இது தொடர்பாகப் பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. 

ttn

இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இது குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழக துறைகளின் மானிய கோரிக்கைகளுக்கான 3 ஆவது நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அப்போது வேலை வாய்ப்பின்மை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சம்பத், ஓசூரில்  ரூ. 635 கோடி மதிப்பில் பைக் தொழிற்சாலை தொடங்கப்பட உள்ளதாகவும், அதன் மூலம் 4,300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.