ஒவ்வொரு துறையிலும் வீழ்ச்சி! ஆனா அவங்க 100 நாளை கொண்டாடுதாங்க- பா.ஜ.வை தாக்கிய அகிலேஷ் யாதவ்

 

ஒவ்வொரு துறையிலும் வீழ்ச்சி! ஆனா அவங்க 100 நாளை கொண்டாடுதாங்க- பா.ஜ.வை தாக்கிய அகிலேஷ் யாதவ்

நாட்டின் ஒவ்வொரு துறையிலும் வீழ்ச்சி அடைந்துள்ளது ஆனால் 100 நாள் ஆட்சி நிறைவை அவங்க கொண்டாடுதாங்க என பா.ஜ.வை அகிலேஷ் யாதவ் கடுமையாக சாடினார்.

உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் ராம்பூரில் தனது கட்சியின் மூத்த உறுப்பினர் அசாம் கானை சந்தித்து விட்டு நேற்று பரேலி வந்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பா.ஜ.வின் மோசமான கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் மோடி

ஒவ்வொரு துறையும் வீழ்ச்சி கண்டுள்ளது. ஆனால் 100 ஆட்சி நிறைவை அரசாங்கம் கொண்டாடி வருகிறது. இந்த மாநிலத்தில் கூட சமாஜ்வாடி அரசு தொடங்கி வைத்த திட்டங்கள் கூட இன்னும் முடிக்கவில்லை. உத்தர பிரதேச மாநில அரசு பணவீக்கத்தை கட்டுபடுத்த மற்றும் வேலைவாய்ப்பு வழங்குவதில் தோல்வி கண்டு விட்டது. மின்சார கட்டணம் மற்றும் எரிபொருள் விலை உயர்ந்து விட்டது.

யோகி ஆதித்யநாத்

உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் சில நேரங்களில் 50 லட்சம் பேருக்கு வேலை வழங்குவேன் என கூறினார். அப்புறம் அதனை 30 லட்சமாக மாற்றினார். இப்பம் 2 லட்சம் பேருக்குதான் வேலை வழங்குவேன் என கூறுகிறார். அவருக்கு இந்த மாநிலத்தில் எத்தனை பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள் என்பது கூட தெரியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.