ஒவ்வொரு இந்தியனும் ஒரு இந்துதான்- ஆர்.எஸ்.எஸ். தலைவர் கருத்து

 

ஒவ்வொரு இந்தியனும் ஒரு இந்துதான்- ஆர்.எஸ்.எஸ். தலைவர் கருத்து

ஒவ்வொரு இந்தியனும் ஒரு இந்துதான் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் 30 நாடுகளை சேர்ந்த சுமார் 80 செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்கள் காஷ்மீர் விவகாரம் முதல் தேசிய குடிமக்கள் பதிவேடு வரை அனைத்து விவகாரங்கள் குறித்தும் மோகன் பகவத்திடம் கேள்வி கேட்டனர். அதற்கு மோகன் பகவத் கூறியதாவது:

சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கம்

சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கம் காஷ்மீர் மக்களை இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் ஒருங்கிணைக்க உதவும். நிலம் மற்றும் வேலை வாய்ப்பு பறிபோகும் என்ற அந்த பகுதி மக்களின் பயத்தை நீக்க மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு இந்தியனும் ஒரு இந்துதான். தேசிய குடிமக்கள் பதிவு என்பது மக்களை வெளியேற்றுவது கிடையாது. குடிமக்களை அடையாளம் காண்பதற்கானது.

தேசிய குடிமக்கள் பதிவு

அண்டை நாடுகளின் துன்புறுத்தலிருந்து இந்தியாவுக்கு தப்பிவந்த இந்து,ஜெயின், பார்சி மற்றும் சீக்கியர்களுக்கு வழங்க வழி செய்கிறது குடியுரிமை திருத்த மசோதா. கும்பல் கொலை உள்பட எந்தவொரு வடிவலான வன்முறைகளுக்கும் ஆர்.எஸ்.எஸ். எதிரானது. கும்பல் கொலை சம்பவங்களை தடுக்கும் பணியில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் ஈடுபடுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.