‘ஒழுங்கா 50 பைசா பாக்கியை கட்டிடுங்க இல்ல நடவடிக்கை பாயும்’ : வாடிக்கையாளருக்கு ஷாக் கொடுத்த வங்கி

 

‘ஒழுங்கா 50 பைசா பாக்கியை கட்டிடுங்க இல்ல நடவடிக்கை பாயும்’ : வாடிக்கையாளருக்கு ஷாக் கொடுத்த வங்கி

உங்கள் மீதுசட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

கோடிக்கணக்கில் கடன்களை வாங்கிவிட்டுத் தலைமறைவாகி வரும் கோடீஸ்வரர்கள்  கதையெல்லாம் நம் நாட்டுக்கு புதிதல்ல. ஆனால் 50 பைசா பாக்கிக்காக  ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர் ஒருவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ttn

ராஜஸ்தான் மாநிலம், ஜுன்ஜுனு பகுதியைச் சேர்ந்த ஜிதேந்திர குமார். இவர் ஸ்டேட் வங்கியில் ஜன்தன் திட்டத்தின் கீழ் வங்கிக்கணக்கு தொடங்கியுள்ளார். இதனிடையே ஜிதேந்திர குமாருக்கு வாங்கி சார்பில் நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், நீங்கள் வங்கிக்கு செலுத்தவேண்டிய 50 பைசா பாக்கியை உடனடியாக செலுத்தவேண்டும். இல்லையென்றால் உங்கள் மீதுசட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ttn

இது ஒருபுறம் அவருக்கு சிரிப்பை ஏற்படுத்தினாலும், எதற்கு வம்பு கட்டி விடுவோம் என்று 50 பைசாவை செலுத்த வங்கிக்கு சென்றுள்ளார். ஆனால்  அவரிடம் 50 பைசாவை  வங்கி  ஊழியர்கள் வாங்க மருத்துள்ளதாக ஜிதேந்திரகுமாரின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.  இந்த சம்பவம் மற்ற வாடிக்கையாளர்கள் மத்தியில்  அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.