ஒற்றுமை யாத்திரைக்கு அனைவரும் வேட்டி கட்டி வர வேண்டும்: வானதி சீனிவாசன் அறிவிப்பு..

 

ஒற்றுமை யாத்திரைக்கு அனைவரும் வேட்டி கட்டி வர வேண்டும்: வானதி சீனிவாசன் அறிவிப்பு..

சமீபத்தில் நரேந்திர மோடி மாமல்லபுரத்தில் சீன அதிபரைச் சந்திக்க வந்த போது தமிழ்நாட்டின் பண்பாட்டைப் போற்றும் வகையில் வேட்டி சட்டை அணிந்து தோளில் துண்டுடன் சென்றார்.

சமீபத்தில் நரேந்திர மோடி மாமல்லபுரத்தில் சீன அதிபரைச் சந்திக்க வந்த போது தமிழ்நாட்டின் பண்பாட்டைப் போற்றும் வகையில் வேட்டி சட்டை அணிந்து தோளில் துண்டுடன் சென்றார். இதனால் மோடியைப் பல தமிழக மக்கள் பாராட்டினார்.

Modi

அக்டோபர் 31 ஆம் தேதி சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளையொட்டி பா.ஜ.க கட்சியினர் ஒற்றுமை யாத்திரை நடத்தவிருக்கின்றனர். அந்த யாத்திரையில் கலந்து கொள்ளும் அனைவரும் வேட்டி, சட்டை, தோளில் துண்டு அணிந்து வர வேண்டும் என்று பா.ஜ.க கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பத்திரிகைச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். 

BJP

அந்த பத்திரிகை செய்தியில் வானதி சீனிவாசன், ‘மாமல்லபுரத்திற்கு வந்த பா.ஜ.க தலைவர் நரேந்திர மோடி தமிழர் பண்பாட்டைப் போற்றும் வகையில் வேட்டி சட்டை அணிந்து சீன அதிபரைப் பார்க்கச் சென்றார். அதனால், தமிழர் சார்பாக அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகச் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளன்று நடக்கவிருக்கும் ஒற்றுமை யாத்திரையில் அனைத்து தொண்டர்களும் வேட்டி சட்டையுடன் கலந்து கொள்ளுமாறு பா.ஜ.க வின் மாநில மையக் குழு சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.