“ஒற்றுமையும், போர்க்குணமும் தமிழீழம் என்ற இறுதி இலக்கை எட்டும் வரை நீடிக்க வேண்டும்” – ராமதாஸ்

 

“ஒற்றுமையும், போர்க்குணமும் தமிழீழம் என்ற இறுதி இலக்கை எட்டும் வரை நீடிக்க வேண்டும்” – ராமதாஸ்

ஈழத்தமிழர்களின், மாணவர்களின் ஒற்றுமையும், போர்க்குணமும் தமிழீழம் என்ற இறுதி இலக்கை எட்டும் வரை நீடிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

“ஒற்றுமையும், போர்க்குணமும் தமிழீழம் என்ற இறுதி இலக்கை எட்டும் வரை நீடிக்க வேண்டும்” – ராமதாஸ்

முள்ளிவாய்க்கால் நினைவிடத்துக்கு மீண்டும் அடிக்கல் நடத்தப்பட்டது. தமிழ் இனப்படுகொலையை நினைவுப்படுத்தும் நோக்கில் யாழ்பல்கலை. அமைக்கப்பட்டிருந்தக முள்ளிவாய்க்கால் நினைவிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவோடு இரவாக இடிக்கப்பட்டது. இதற்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் இறங்கிய நிலையில் யாழ்ப்பாணம் பல்கலை.யில் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை மீண்டும் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.

“ஒற்றுமையும், போர்க்குணமும் தமிழீழம் என்ற இறுதி இலக்கை எட்டும் வரை நீடிக்க வேண்டும்” – ராமதாஸ்

மாணவர்கள், இலங்கை அரசின் வேண்டுகோளை ஏற்று அடிக்கல் நாட்டப்பட்டது. நினைவுத்தூண் பழைய மாதிரிலேயே அரசின் அங்கீகாரத்துடன் கட்டி முடிக்கப்படும் என்று துணைவேந்தர் தெரிவித்தார். இதனால் துணைவேந்தரின் கோரிக்கையை ஏற்று மாணவர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டனர்.

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழர் இனப்படுகொலையை நினைவு கூறும் நினைவுத்தூணை மீண்டும் அதே இடத்தில் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!முள்ளிவாய்க்கால் நினைவுத்தூணை இடித்த சிங்கள இனவெறி அரசின் செயலைக் கண்டித்து 9 தமிழ் மாணவர்கள் காலவரையற்ற உண்ணாநிலை மேற்கொண்டதன் பயனாகத் தான் இது சாத்தியமாகியிருக்கிறது.

தங்கள் உடலை வருத்தி இதை சாதித்த மாணவர்களுக்கு பாராட்டுகள்!தமிழர்கள் ஒன்றுபட்டால், குறிப்பாக மாணவர்கள் ஒன்று பட்டால் இலக்குகளை எட்ட முடியும் என்பதற்கு இது உதாரணம். ஈழத்தமிழர்களின், மாணவர்களின் இந்த ஒற்றுமையும், போர்க்குணமும் #தமிழீழம் என்ற இறுதி இலக்கை எட்டும் வரை நீடிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.