’ஒரே ராத்திரியில் அரசியலில் முன்னுக்கு வந்துவிட்டார் உதயநிதி ஸ்டாலின்’…இயக்குநர் பாக்யராஜ் பகடி…

 

’ஒரே ராத்திரியில் அரசியலில் முன்னுக்கு வந்துவிட்டார் உதயநிதி ஸ்டாலின்’…இயக்குநர் பாக்யராஜ் பகடி…

நடிகரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதிக்கு சமீபத்தில் திமுகவின் இளைஞரணி செயலாளர் பதவி அளிக்கப்பட்டது

தனது மகன் சாந்தனு குறித்துப் பெருமூச்சு விட்ட அதே நேரத்தில் உதயநிதிக்கு இவ்வளவு சீக்கிரத்தில் அவ்வளவு பெரிய பதவியா என்று லைட்டாக தந்து பொறாமையை வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் பாக்யராஜ்.

udhay

நடிகரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதிக்கு சமீபத்தில் திமுகவின் இளைஞரணி செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. உதயநிதி தீவிர அரசியலில் இறங்கி ஒருசில மாதங்களே ஆன நிலையில் அவருக்கு இவ்வளவு பெரிய பதவியா? என அரசியல் விமர்சகர்கள் உதயநிதியை விமர்சனம் செய்து வருகின்றனர். கடந்தவாரத்தின் தொலைக்காட்சி விவாதங்கள் பலவற்றில் உதயநிதியே ஊறுகாயாக்கப்பட்டிருந்தார்.

asuraguru

இந்நிலையில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாக உள்ள ‘அசுரகுரு’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பாக்யராஜ், ‘சினிமாவில் வாரிசுகளுக்கு அவ்வளவு எளிதில் வெற்றி வசப்படுவதில்லை. போராடிதான் வெற்றிபெற வேண்டியுள்ளது.  ஆனால் அரசியலில் அப்படியில்லை.  ஒரே இரவில் முன்னுக்கு வந்து விடுகிறார்கள்’ என  கூறினார். 

 

இதன்மூலம் திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி வழங்கப்பட்டது குறித்து பாக்யராஜ் மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.உதயநிதியும் பாக்யராஜின் வாரிசு சாந்தனு அளவுக்கு கணிசமான தோல்விப்படங்கள் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.