ஒரே மாதத்தில் 49லட்சம் வாடிக்கையாளர்களை இழந்த வோடாஃபோன், ஏர்டெல்!

 

ஒரே மாதத்தில் 49லட்சம் வாடிக்கையாளர்களை இழந்த வோடாஃபோன், ஏர்டெல்!

ஜியோவின் வருகை பல நெட்வொர்க்குகளை சரிவில் தள்ளியுள்ளது. இதில் பிஎஸ்என்எல், ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா ஆகிய நிறுவனங்கள் அடங்கும்

ஜியோவின் வருகை பல நெட்வொர்க்குகளை சரிவில் தள்ளியுள்ளது. இதில் பிஎஸ்என்எல், ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா ஆகிய நிறுவனங்கள் அடங்கும்.

idea

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் வோடாஃபோன் ஐடியா நிறுவனம் 25 லட்சத்து 70 ஆயிரம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. தற்போது அந்த நிறுவன வடிக்கையாலட்கள் 37 கோடியே 24 லட்சமாக உள்ளனர்.

airtel

பார்தி ஏர்டெல் நிறுவனம் 23 லட்சத்து 80 ஆயிரம் வாடிக்கையாளர்களை இழந்து  தற்போது 32 கோடியே 55 லட்சம் வாடிக்கையாளர்களை மட்டுமே தங்கள் வசம் வைத்துள்ளதாகத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

jio

அதே சமயம் ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை  69 லட்சத்து 83 ஆயிரம் அதிகரித்து 35 கோடியே 52 லட்சமாக உயர்ந்துள்ளது.

bsnl

அதேபோல் பிஎஎஸ்என்எல்  7 லட்சத்து 37 ஆயிரம் வாடிக்கையாளர்களைக் கூடுதலாகச் சம்பாதித்து,  11 கோடியே 69 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்ட நிறுவனமாக  உள்ளது.