ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளை பெற்ற அதிசய  பெண்-அதுவும் நார்மல் டெலிவரியில் …    

 

 ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளை பெற்ற அதிசய  பெண்-அதுவும் நார்மல் டெலிவரியில் …     

இது பற்றி மருத்துவமனையின் சிவில் சர்ஜன் டாக்டர் ஆர்.பி. கோயல் கூறுகையில், “இது ஒரு சாதாரண பிரசவமாகும். ஒவ்வொரு குழந்தையின் எடை  500 கிராம் முதல் 790 கிராம் வரை உள்ளது .”ஆறு குழந்தைகளின் மொத்த எடை 3.65 கிலோ ஆகும். உயிர் பிழைக்காத இரு குழந்தைகள்  350-400 கிராம் எடையுள்ளதாக சிவில் சர்ஜன் கூறினார்.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பரோடா கிராமத்தில் வசிக்கும் ஒரு தொழிலாளியின் மனைவியான   22 வயதான மூர்த்தி மாலிக்கு சாதாரண பிரசவத்தில்  ஆறு குழந்தைகளை பிறந்த அதிசயம் இன்று நடந்துள்ளது
  
இது பற்றி மருத்துவமனையின் சிவில் சர்ஜன் டாக்டர் ஆர்.பி. கோயல் கூறுகையில், “இது ஒரு சாதாரண பிரசவமாகும். ஒவ்வொரு குழந்தையின் எடை  500 கிராம் முதல் 790 கிராம் வரை உள்ளது .
“ஆறு குழந்தைகளின் மொத்த எடை 3.65 கிலோ ஆகும். உயிர் பிழைக்காத இரு குழந்தைகள்  350-400 கிராம் எடையுள்ளதாக சிவில் சர்ஜன் கூறினார்.” இரட்டையர்கள் அல்லது மூன்று குழந்தைகள்  பிறப்பு பொதுவானது, ஆனால் ஆறு குழந்தைகள் பிறப்பது  மிகவும் அரிதானவை, “என்று அவர் மேலும் கூறினார்.

women 6 babys

அவரது கணவர் வினோத் மற்றும் மாமியார் ஆகியோருடன் அந்த பெண்  காலை 8.45 மணியளவில் மாவட்ட மருத்துவமனையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டார். 
“அனைத்து குழந்தைகளும் காலை 9 மணி முதல் காலை 9.30 மணி வரை அரை மணி நேரத்திற்குள் பிரசவிக்கப்பட்டனர்” என்று மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.
போபாலில் உள்ள காந்தி மருத்துவக் கல்லூரியின் மகளிர் மருத்துவத் துறையின் தலைவர் டாக்டர் அருணா குமார், “இது மிகவும் அரிதானது, பில்லியனில் ஒன்று,கடந்த 30 ஆண்டுகளில் இப்போது  மட்டுமே நான் இதுபோல ஒரு பிரசவத்தை பார்த்திருக்கிறேன்” என்றார்.
அவர்கள் மிகவும் எடை குறைவாக இருப்பதால் இந்த குழந்தைகளின் உயிர்பிழைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு   என்றும் அவர்  கூறினார்.