ஒரே நாளில் 1.26 லட்சம் இளைஞர்களுக்கு அரசுப் பணி நியமன ஆணை வழங்கி அசத்திய ஜெகன்மோகன் ரெட்டி!

ஒரே நாளில் 1.26 லட்சம் இளைஞர்களுக்கு அரசுப் பணி நியமன ஆணை வழங்கி அசத்திய ஜெகன்மோகன் ரெட்டி!

இந்தியாவிலேயே முதன்முறையாக ஆந்திராவில் ஒரே நாளில் மொத்தம் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 728 பேரை அரசு பணிகளில் அமர்த்தியதற்கான ஆணைகளை அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி சாதனை படைத்துள்ளார். 

இந்தியாவிலேயே முதன்முறையாக ஆந்திராவில் ஒரே நாளில் மொத்தம் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 728 பேரை அரசு பணிகளில் அமர்த்தியதற்கான ஆணைகளை அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி சாதனை படைத்துள்ளார். 

ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்புக்குப் பின் பல அதிரடி திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது . அந்த வகையில் ஆந்திர சட்டமன்றத்தில் அம்மாநில இளைஞர்களுக்கான சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதில், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,  கூட்டுத் தொழில் நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் இயங்கும் நிறுவனங்கள் என அனைத்து வேலைவாய்ப்பு நல்கும் இடங்களிலும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கே   75% பணியிடங்களை ஒதுக்கீடு  செய்ய வேண்டும் என்றும் இது அனைத்து வித பணிகளுக்கும் பொருந்தும் என்றும் கோரப்பட்டிருந்தது. 

photo

ஊரக மேம்பாடு, வருவாய், மருத்துவம், சுகாதாரம், கால்நடை பராமரிப்பு, மின்சாரம், வேளாண்மை, சமூக நலம் ஆகியவை தொடர்பான அரசு சேவை மையம் கிராம மற்றும் நகர்புறங்களில் தொடங்கப்படவுள்ளது. இந்த பணிக்கு ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 21 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அந்த தேர்வை 19 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதிய நிலையில்,  வெற்றிப்பெற்ற  1,26,728 பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஆணையை அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி வழங்கினார்.