ஒரே நாளில் ரூ.1 லட்சம் கோடி அள்ளி கொடுத்த பங்கு சந்தை! சென்செக்ஸ் 199 புள்ளிகள் உயர்ந்தது

 

ஒரே நாளில் ரூ.1 லட்சம் கோடி அள்ளி கொடுத்த பங்கு சந்தை! சென்செக்ஸ் 199 புள்ளிகள் உயர்ந்தது

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 199 புள்ளிகள் உயர்ந்தது.

அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக போர் முடிவுக்கு வந்து அந்நாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்தம் விரைவில் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது. 

அமெரிக்கா-சீனா வர்த்தக ஒப்பந்தம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.154.65 லட்சம் கோடியாக உயர்ந்து இருந்தது. நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.153.70 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இன்று ஒரு நாளில் மட்டும் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.95 ஆயிரம் கோடி லாபம் கிடைத்துள்ளது.

யெஸ் பேங்க்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவன பங்குகளில், யெஸ்பேங்க், ஸ்டேட் வங்கி, மாருதி, சன்பார்மா, இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் டாடா மோட்டார்ஸ் உள்பட 24 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. எல் அண்டு டி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஐ.டி.சி. மற்றும் டாடா ஸ்டீல் உள்பட 6 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,227 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,289 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. அதேசமயம் 213 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது.

எல் அண்டு டி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 199.31 புள்ளிகள் உயர்ந்து 41,020.61 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 63 புள்ளிகள் ஏற்றம் கண்டு 12,100.70 புள்ளிகளில் நிலை கொண்டது.