ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்தது தங்க விலை !

 

ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்தது தங்க விலை !

மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்த தங்க விலை கடந்த மூன்று நாட்களாக அதிரடியாக உயர்ந்து வருகிறது.

கடந்த மாதம் ரூ.29,700க்கும் மேல் விற்கப்பட்டு வந்த தங்க விலை கிடுகிடுவெனக் குறைந்து கொண்டே வந்தது. அதன் பின்னர், மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்த தங்க விலை கடந்த மூன்று நாட்களாக அதிரடியாக உயர்ந்து வருகிறது. அதாவது, நேற்று ரூ.112 மற்றும் நேற்று முன் தினம் ரூ.112 உயர்ந்ததைத் தொடர்ந்து இன்றும் தங்க விலை உயர்ந்துள்ளது. 

gold

இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.33உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.3,698க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.264 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.29,584க்கு விற்கப்படுகிறது. கடந்த மூன்று நாட்களாகத் தங்க விலை ரூ.488 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.49.80க்கு விற்கப்படுகிறது. அதன் படி, வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.400 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.49,800க்கு விற்கப்படுகிறது.