ஒரே நாடு ஒரே சேனல், அதுவும் ரிபப்ளிக் சேனல்?

 

ஒரே நாடு ஒரே சேனல், அதுவும் ரிபப்ளிக் சேனல்?

சென்னை, மதுரை, கோவை, திருப்பதி என நான்கு மூலைகளில் இருக்கும் பல்வேறு கேந்திரங்களுக்கும் ஒரெ ஒருவரை தலைவராக நியமித்தால், அவரால் எப்படி தரமாக நடத்திட முடியும் என கேள்வி கேட்கும் நிலைய ஆர்வலர்கள், சென்னையில் இருந்து எந்த ப்ராஜெக்டும் இந்த கேந்திரத்துக்கு அனுப்பப்படுவதில்லை என்றும், நிகழ்ச்சிகள் செய்வதற்கும் அனுமதிக்கப்படுவதில்லை என கவலை தெரிவிக்கின்றனர்.

தென்மாவட்ட நிகழ்ச்சிகள், பண்பாட்டு நிகழ்வுகள், திருவிழாக்கள் மற்றும் கலைஞர்கள், எழுத்தாளர்களின் நேர்முக உரையாடல்கள் எனப் பலரின் பங்களிப்போடு சிறப்பாகச் செயல்பட்டு வந்த பொதிகை தொலைக்காட்சியின் மதுரைப்பிரிவு விரைவிலேயே மூடுவிழா காணும் நிலையில் இருக்கிறது. இதற்கு முன்பாக இந்த கேந்திரத்தின் தலைவராக இருந்த ஆண்டாள் பிரியதர்ஷினி பணிகாலத்தில் துவங்கப்பட்ட நிறைய நிகழ்ச்சிகளுக்கு பார்வையாளர்களிடம் மட்டுமல்ல, விளம்பரதாரர்களிடமிருந்தும் நல்ல வரவேற்பு இருந்திருக்கிறது.

Doordarshan Madurai Kendra

ஆனால், கடந்த 2017-ல் வசுமதி தலைமையேற்றதில் இருந்து, இந்த கேந்திரத்தில் இருட்டட்டிப்பு வேலைகள் நடப்பதாக புகார்கள் எழும்புகின்றன. சென்னை, மதுரை, கோவை, திருப்பதி என நான்கு மூலைகளில் இருக்கும் பல்வேறு கேந்திரங்களுக்கும் ஒரெ ஒருவரை தலைவராக நியமித்தால், அவரால் எப்படி தரமாக நடத்திட முடியும் என கேள்வி கேட்கும் நிலைய ஆர்வலர்கள், சென்னையில் இருந்து எந்த ப்ராஜெக்டும் இந்த கேந்திரத்துக்கு அனுப்பப்படுவதில்லை என்றும், நிகழ்ச்சிகள் செய்வதற்கும் அனுமதிக்கப்படுவதில்லை என கவலை தெரிவிக்கின்றனர்.

Venkatesan, MP

பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசு தொலைக்காட்சி போன்ற லாபநோக்கற்ற மக்களுக்கு நிகழ்ச்சிகளை வழங்கக்கூடிய நிறுவனங்களை மூடுவதற்கு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ள அரசு, பொதிகை தொலைக்காட்சியின் மதுரை மற்றும் கோவை கேந்திரங்களை மூடுவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்னரே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன். மதுரை தூர்தர்ஷன் கேந்திர விவகாரம் தொடர்பாக, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களை சந்தித்து, இந்தக் கேந்திரங்களை மூடவிடாமல் காக்க நடவடிக்கை எடுப்பதாக வெங்கடேசன் எம்.பி. உறுதி அளித்துள்ளார்.