ஒரே தொகுதிக்கு 3 எம்.பி… இந்திய வரலாற்றில் தமிழகத்தில் எடப்பாடி செய்த சாதனை..!

 

ஒரே தொகுதிக்கு 3 எம்.பி… இந்திய வரலாற்றில் தமிழகத்தில் எடப்பாடி செய்த சாதனை..!

தர்மபுரி தொகுதிக்கு தற்போது 3 எம்.பி.க்கள் கிடைத்து உள்ளது இந்தியாவில் எந்தத் தொகுதிக்கும் இல்லாத சாதனை.

தர்மபுரி தொகுதிக்கு தற்போது 3 எம்.பி.க்கள் கிடைத்து உள்ளது இந்தியாவில் எந்தத் தொகுதிக்கும் இல்லாத சாதனை. தர்மபுரி மக்களவை தொகுதி எம்.பி.யாக திமுக சார்பில் டாக்டர் செந்தில் நான் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏற்கனவே தர்மபுரி தொகுதியில் எம்.பி.யாக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். தர்மபுரி எம்.பி. தொகுதிகள் அடங்கிய மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அதிமுக நகர செயலாளர் சந்திரசேகர் அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இந்தியாவில், இதுவரை ஒரே தொகுதிக்கு 3 எம்.பிக்கள் நாடாளுமன்றத்திற்கு சென்றதே இல்லை. அந்த சாதனையை திமுகவுடன் இணைந்து எடப்பாடி பழனிசாமி செய்திருக்கிறார். ஆக மொத்தத்தில் தர்மபுரி உண்மைய்மையில் தர்மபூமி தான்..!