ஒரே தலைப்பால் மோதி கொண்ட ஹீரோக்கள்: கடைசியில் ஜெயிச்சது என்னமோ இவர்தானாம்!?

 

ஒரே தலைப்பால் மோதி கொண்ட ஹீரோக்கள்: கடைசியில் ஜெயிச்சது  என்னமோ இவர்தானாம்!?

 நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய் தேவரகொண்டா இருவர் நடிக்கும் படங்களின் தலைப்பும் ‘ஹீரோ’ என வைக்கப்பட்ட விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு முடிவெடுத்துள்ளது. 

நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய் தேவரகொண்டா இருவர் நடிக்கும் படங்களின் தலைப்பும் ‘ஹீரோ’ என வைக்கப்பட்ட விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு முடிவெடுத்துள்ளது. 
 

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவுள்ள புதிய படத்திற்கு, ‘ஹீரோ’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் அர்ஜுன், கல்யாணி ப்ரியதர்ஷன், இவானா ஆகியோர் நடிக்கவுள்ளனர்.  யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் பூஜை கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி சென்னையில்  நடைபெற்றது. 

siva

ஆனால், விஜய் தேவரகொண்டா நடிப்பில், ‘காக்கா முட்டை’ படத்தின் வசனகர்த்தா ஆனந்த் அண்ணாமலை இயக்கத்தில் உருவாகும் படத்துக்கும் ‘ஹீரோ’ தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என 4 தென்னிந்திய மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாவதால்,  பொதுவான தலைப்பாக ‘ஹீரோ’ என்று வைக்கப்பட்டுள்ளது. இந்த தலைப்பைப் படத்தை தயாரித்துவரும் டிரைபல் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவுசெய்து, அதைக் கடந்த வருடம் (2018) ஜூன் மாதம் 14-ம் தேதி புதுப்பித்துள்ளனர். 

deverakonda

இந்நிலையில் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ள தயாரிப்பாளர் சங்கம்,  எதிர்பாராமல் இந்த நிகழ்வு நடந்துள்ளது. விஜய் தேவரகொண்டா படக்குழு ஏற்கனவே  இந்த டைட்டிலை பதிவு செய்து இருப்பதால் நீங்கள் வேறு தலைப்பு மாற்றி கொள்ளுங்கள் என்று சிவகார்த்தி டீமுக்கு அறிவுறுத்தியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.