ஒரே ஆண்டில் 4-வது முறையாக முழுக் கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை!

 

ஒரே ஆண்டில் 4-வது முறையாக முழுக் கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை!

செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி பல வருடங்கள் கழித்து மேட்டூர் அணை முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது.

கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு மற்றும் கர்நாடகா மாநிலத்தில் உள்ள கிருஷ்ண சாகர், கபினி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி பல வருடங்கள் கழித்து மேட்டூர் அணை முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது.

Mettur dam

அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 24 மற்றும் அக்டோபர் 23 ஆம் தேதி மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது. அதன் பிறகு, மேட்டூர் அணையின் நீர் வாரத்தின் அளவு ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. 

Dam

இந்நிலையில், தமிழகத்தில் பருவ மழை தொடங்கியதால் மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்தின் அளவு அதிகரித்தது. அதனால், மேட்டூர் அணை  நான்காவது முறையாக முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. அணையிலிருந்து பாசனத்திற்காக 20 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை 4-ஆவது முறையாக 120 அடியை எட்டியதால் விவசாயிகளும் பொதுமக்களும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.