ஒரேஒரு ஆள், ஒத்த ஆள், என்ன பண்ணமுடியும்? என்னவெல்லாம் பண்ணமுடியும்?

ஒரேஒரு ஆள், ஒத்த ஆள், என்ன பண்ணமுடியும்? என்னவெல்லாம் பண்ணமுடியும்?

இவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் நோக்கோடு அங்குவந்த கோவிந்தப்பா, விவசாயத்தின் அடிமுதல் நுனிவரை ஒவ்வொன்றாக சொல்லிகொடுத்தார். நிலத்தை பண்படுத்துதல், நீர் மேலாண்மை, இயற்கை விவசாயம், பல்தானிய சாகுபடி என ஒவ்வொரு அடியாக சொல்லிகொடுத்தார். இன்றைக்கு, டாஸ்ஸி குடும்பம் வருடத்திற்கு லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறது. அவரின் 10 பிள்ளைகளில் 4 பேர் இன்னமும் படிக்கிறார்கள், மீதி 6 பேர் விவசாயத்தில் தாய்க்கு உதவியாக இருக்கிறார்கள்.

ஜேனு குருப பழங்குடியினத்தைச் சேர்ந்த 60 குடும்பங்களை, கடந்த 2007ஆம் ஆண்டு கர்நாடக அரசு அவர்களின் பூர்விக மலைக்காடுகள் வசிப்பிடங்களில் இருந்து, சொல்லேபுரா பகுதியில் மறுகுடியமர்த்தியது. மறுகுடியமர்வுக்கு ஒப்புக்கொண்ட 60 குடும்பங்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய், ஒரு வீடு, மூன்று ஏக்கர் நிலம் ஒதுக்கியது கர்நாடக அரசு. அந்த 60 குடும்பங்களில் ஒன்று டாஸ்ஸியும் அவரது பத்து குழந்தைகளும். இந்த மறுகுடியமர்வுக்கு இரண்டு மாதங்களுகு முன்னர்தான் டாஸ்ஸியின் கணவர் இறந்துபோயிருந்தார். புதிய ஊர், புதிய இடம், புதிய வீடு, பத்து குழந்தைகள், கணவர் இல்லை. அடுத்த 12 வருடங்களில் டாஸ்ஸியின் வாழ்க்கை எப்படி மாறியிருக்கக்கூடும்?

Daasi

சினிமாவில் மட்டுமே சாத்தியமான ஒற்றைப்பாடலில் முன்னேற்றம், டாஸ்ஸியின் வாழ்வில் மட்டுமல்ல மற்ற 59 மலைவாழ் பழங்குடியினரிடமும் சாத்தியமாகி இருக்கிறது. இதற்குக் காரணம், பெங்களூருவைச் சேர்ந்த தொண்டு நிறுவனமான வனவாழ்வு பாதுகாப்பு இயக்கமும் அதன் ஊழியர்களில் ஒருவருமான கோவிந்தப்பாவும்.

Dassi

அரசாங்கம் தந்த மூன்று ஏக்கர் நிலத்தை வைத்து என்ன செய்வதென தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தது அந்த 60 பழங்குடிகள். ஏனெனில் அவர்களுக்கு விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாது. அதற்குமுன் அவர்கள் விவசாயம் செய்ததே இல்லை.

Dassi

இவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் நோக்கோடு அங்குவந்த கோவிந்தப்பா, விவசாயத்தின் அடிமுதல் நுனிவரை ஒவ்வொன்றாக சொல்லிகொடுத்தார். நிலத்தை பண்படுத்துதல், நீர் மேலாண்மை, இயற்கை விவசாயம், பல்தானிய சாகுபடி என ஒவ்வொரு அடியாக சொல்லிகொடுத்தார். இன்றைக்கு, டாஸ்ஸி குடும்பம் வருடத்திற்கு லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறது. அவரின் 10 பிள்ளைகளில் 4 பேர் இன்னமும் படிக்கிறார்கள், மீதி 6 பேர் விவசாயத்தில் தாய்க்கு உதவியாக இருக்கிறார்கள்.

Dassi

கன்னட பத்ரிகையான “விஜய் கர்நாடகா” டாஸ்ஸிக்கு “சூப்பர் விவசாயி” பட்டம் வழங்கும் அளவுக்கு டாஸ்ஸி வளர்ந்துவிட்டார் என்றால் பாருங்கள். அதைவிட மகிழ்ச்சியான விஷயம், பாரம்பரியமாக விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்து விவசாயம் செய்பவர்களைவிடவும், டாஸ்ஸி விவசாயத்தில் அதிகம் சம்பாதிக்கிறார்.

Dassi

 டாஸ்ஸி இதுவரை வங்கியில் கடன்வாங்கவே இல்லை என்பதையும் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். இப்போது இந்த 60 குடும்பங்களுக்கும் ஆதார் மட்டுமல்ல, மற்ற எல்லா அரசு மானியங்களும் கிடைக்கப்பெறுகின்றன. நம்ம ஊருக்கு ஒரு கோவிந்தப்பா கிடைப்பாரா?