ஒரு வழியாக ட்ராமா முடிந்தது: அனைவரிடமும் மன்னிப்பு கேட்ட கவின் 

 

ஒரு வழியாக ட்ராமா முடிந்தது: அனைவரிடமும் மன்னிப்பு கேட்ட கவின் 

பிக் பாஸ்யின் 26ம் நாளுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ்யின் 26ம் நாளுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் வீட்டில் பிளே பாய் கவினின் காதல் நாடகம் கிட்டத் தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. ஒரே நேரத்தில் நான்கு பெண்களிடம் ஜாலியாக பழகி கொண்டிருந்த கவின், ஒரு கட்டத்தில் சாக்சி மற்றும் லாஸ்லியாவுடன் நெருங்கிப் பழகினார். காதல், நட்பு என இருவரையும் குழப்பி தானும் குழம்பி, இன்று இருவரிடமும் வெறுப்பைச் சம்பாதித்துள்ளார். 

ஆனால் அந்த தப்பை தற்போது உணர்ந்து அவர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அதற்கான புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், ‘ஒன்னு நான் முயற்சி செய்தேன். ஆனால் அது அது எங்கயோ போய் முடிஞ்சிடுச்சி. என் தப்பு என்னனு இப்போ தெரியுது. இந்த வீட்டுல எல்லோர் கிட்டயும் நான் எப்படி பழகி இருக்கேன். நேற்று நைட்லேந்து வேறு விதமா பார்க்கும் படி ஆகிவிட்டது. எல்லார் கிட்டயும் நான் சாரி கேட்டுக்கிறேன்’ என்று கேட்டுள்ளார். 

மறுபக்கம் சாக்ஷி பாத்ரூமில் கதறி அழுவது போல் காட்டப்பட்டுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் ‘இந்த கவின் எதுக்கு சம்மந்தமே இல்லாம ஓவரா நடிக்கிறாரு’ என்று கமெண்ட் செய்துள்ளனர்.