ஒரு லட்சத்தில் ஆட்டோ வீடு! – நாமக்கல் இளைஞரின் அசத்தல் ஐடியா

ஒரு லட்சத்தில் ஆட்டோ வீடு! – நாமக்கல் இளைஞரின் அசத்தல் ஐடியா

வெளிநாடுகளில் வாகனங்கள், கண்டெய்னரை பயன்படுத்தி சிறிய வீடுகள் தயாரிக்கப்படுகின்றன. அதே பாணியில் நம்மூரில் ஆட்டோவில் வீட்டை உருவாக்கிய நாமக்கல் இளைஞரின் ஐடியா பாராட்டைப் பெற்றுள்ளது.

வெளிநாடுகளில் வாகனங்கள், கண்டெய்னரை பயன்படுத்தி சிறிய வீடுகள் தயாரிக்கப்படுகின்றன. அதே பாணியில் நம்மூரில் ஆட்டோவில் வீட்டை உருவாக்கிய நாமக்கல் இளைஞரின் ஐடியா பாராட்டைப் பெற்றுள்ளது.

man

ஒரு ஆட்டோ இரண்டு, இரண்டரை லட்சத்துக்கு கிடைக்கிறது. அதில் கூடுதலாக ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்து ஒருவர் சௌகரியமாக தங்கும் வகையில் அனைத்து வசதிகளும் கொண்ட வீட்டை நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்த இளைஞர் உருவாக்கியுள்ளார். இந்த வீட்டில் கழிப்பறை, சமையல் அறை, மொட்டை மாடி என்று ஒரு வீட்டில் இருக்க வேண்டிய அத்தனை வசதிகளும் உள்ளன. 

auto

ஆட்டோ வீட்டை உருவாக்கிய அருண் பிரபு கூறுகையில், “ஒரு லட்ச ரூபாயில் ஆட்டோவில் வீடு ஒன்றை உருவாக்கிவிட்டேன். இதற்கு ஐந்து மாதங்கள் ஆனது. இந்த வீட்டில் வெந்நீர் வைக்க, துணி காயபோட என்று பல வசதிகள் உள்ளன. மேலும் அறைகளில் மின் விளக்கு, ஃபேன், கம்ப்யூட்டர் பயன்படுத்த வசதி என அனைத்தும் பார்த்து பார்த்து உருவாக்கியுள்ளேன்” என்றார்.

auto

வீட்டின் பாதுகாப்பு அம்சங்கள், வெயில், மழை, புயலில் தாக்குப்பிடிப்பது என்று சில குறைபாடுகள் இருந்தாலும் இளைஞர் அருண் பிரபுவின் இந்த முயற்சி பாராட்டுக்குரியதே. ஒரு சிறிய இடத்தில் இவ்வளவு வசதி கொண்ட வீட்டை உருவாக்க முடியும் என்பதை மக்களுக்கு அருண் பிரபு நிரூபித்துள்ளார். இனி நம் ஊரிலும் சிறிய சொகுசு வீடுகள் தயாரிக்கும் முயற்சிகள் சூடு பிடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.