ஒரு மேஜிக் மேனுக்கு நடந்த துயரம்… சாதனையா… வேதனையா..!?

ஒரு மேஜிக் மேனுக்கு நடந்த துயரம்… சாதனையா… வேதனையா..!?

உலகம் முழுக்க மேஜிக்கில் இப்போது நம்ப முடியாத சில அதிசயங்களை நிகழ்த்தும் ஆட்கள் எல்லாம் வந்த பிறகு,சாராரசரியாக செய்யக்கூடிய சீட்டு கட்டு மெஜிக்கையெல்லாம் பார்ப்பதற்கு ஆட்கள் குறைந்து விட்டார்கள். அந்த வித்தியாசமாக ஏதாவது செய்து அசத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக முயற்சித்துக்கொண்டிருப்பவர் சஞ்சால் ஹரி.

மேற்கு வங்கத்தை சேர்ந்த இவர்,சில ஆண்டுகளுக்கு முன்பு நீரின் மீது நடந்து காட்டுகிறேன் என்று சபதம் போட்டு பொது மக்கள் முன்னிலையில் களத்தில் இறங்கினார்.சொதப்பலாகிவிட பொதுமக்கள் ஏக டென்ஷனாகிவிட்டார்கள்.2002-ம் ஆண்டு தோட்டா துளைக்காத கண்ணாடி கூண்டுக்குள்,நீர் புகக்கூடிய வட்ட ஓட்டைகளுடன் 36 பூட்டுக்களை பூட்டி நீரில் இறங்கிய சஞ்சால்,வெளியேறினார்.

magic man

அதுக்கப்புறம்,எந்த விதத்திலும் வெளியேற முடியாது என்று உறுதி செய்யப்பட கம்பிக் கூண்டுக்குள் தன்னை அடைத்துக்கொண்டு,நீரில் இறங்கி, 29 நிமிடங்களில் வெளியேறியபோது,அவர் இரு ஆணிகளை நீக்கிவிட்டு கள்ளத்தனமாக கதவைத்திறந்து கொண்டு வெளியில் வந்ததைப் பார்த்துவிட்டதாக பொதுமக்கள் அவரைத் தாக்கிய சம்பவமும் நடந்தது.
ஆனாலும்,மக்களிடம் சாதனை செய்து காட்டவேண்டும் என்ற ஆர்வம் மட்டும் குறையவில்லை! இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கை,கால்களை சங்கிலிக்  கயிறால் கட்டி, நீரில் இறங்கியிருக்கிறார்.ஏதாவது கோல்மால் செய்தாவது வெளியில் வந்துவிடுவார் என்று நம்பிய பொதுமக்களுக்கும் பெரிய அதிச்சியைக் கொடுத்திருக்கிறார்.அடுத்தநாள் காலை வரை அவர் வெளியே வராததால் உயிரிழந்திருக்கக்கூடும் என்று எல்லோரும் அதிர்ச்சியாகச் சொல்கிறார்கள்.
இந்த சாதனையைச் செய்வதற்கு முன்பு,”நான் நீரிலிருந்து வெளியேறி வந்துவிட்டால்… மேஜிக், இல்லையென்றால்,அது சோகமுடிவு” என்று எல்லோரையும் பார்த்து சிரித்தபடியே சொல்லிவிட்டு நீருக்குள் இறங்கியிருக்கிறார்.எப்படியாவது அவர் மேலே வந்துவிட மாட்டாரா என்று அவரைப் பிடிக்காதவர்களும் கவலையோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.