ஒரு முறை சார்ஜ் செய்தால் 60கிமீ தூரம் ஓடும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம் ; விலை எவ்வளவு தெரியுமா?

 

ஒரு முறை சார்ஜ் செய்தால் 60கிமீ தூரம் ஓடும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம் ; விலை எவ்வளவு தெரியுமா?

ஒரு முறை சார்ஜ் செய்தால் 60கிமீ தூரம் ஓடும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பூனேவை சேர்ந்த அவான் மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 60கிமீ தூரம் ஓடும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பூனேவை சேர்ந்த அவான் மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இரண்டு வித வேரியண்ட்கள் 

டிரெண்ட் இ என அழைக்கப்படும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், ஒரு பேட்டரி பேக், இரண்டு பேட்டரி பேக் என  இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது.  மற்ற ஸ்கூட்டர்களை போன்றே அவான் டிரெண்ட் இ ஸ்கூட்டரிலும் 48 வோல்ட், 28Ah லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்பட்டிருக்கிறது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

இந்த பேட்டரி பேக் ஒருமுறை சார்ஜ் செய்தால் 60 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இரண்டு பேட்டரி பேக் கொண்டிருக்கும் டிரெண்ட் இ ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் 110 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 45 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என்றும் இந்த பேட்டரிகளை 2 முதல் 4 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்து விட முடியும்.

விலை எவ்வளவு ?

அவான் டிரெண்ட் இ ஸ்கூட்டர் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் காயில் ஸ்ப்ரிங்களை கொண்டிருக்கிறது. பிரேக்கிங்கை பொருத்தவரை முன்புறம் டிஸ்க் பிரேக், பின்புறம் டிரம் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. அவான் டிரெண்ட் இ ஸ்கூட்டர் ஆட்டோமொபைல் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

அவான் டிரெண்ட் இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முதல் வேரியண்ட் ரூ.56,900 (எக்ஸ்-ஷோரூம்) என விலை  நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் இரண்டு பேட்டரி பேக் கொண்ட வேரியண்ட் விலை ரூ.81,269 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன்பதிவு கட்டணம் ரூ.1,100 ஆகும்.

 

இதையும் படிங்க :

வெய்யில் காலத்தில் காரில் பயணிக்கும் போது இந்த தவறை மட்டும் செய்ய வேண்டாம் !

3000 கிலோமீட்டர் சைக்கிளில் பயணித்த தாத்தா !