ஒரு மாத காலமாக தனி ஆளாக மத்திய பிரதேசத்தை ஆட்சி செய்த சிவராஜ் சிங் சவுகான்…. இன்று அமைச்சரவை விரிவாக்கம்.

 

ஒரு மாத காலமாக தனி ஆளாக மத்திய பிரதேசத்தை ஆட்சி செய்த சிவராஜ் சிங் சவுகான்…. இன்று அமைச்சரவை விரிவாக்கம்.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்ததையடுத்து, கடந்த மாதம் 23ம் தேதி பா.ஜ.க. ஆட்சியை பிடித்தது. முதல்வராக சிவ்ராஜ் சிங் சவுகான் பதவியேற்றார். கடந்த ஒரு மாதமாக மாநில அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவில்லை. கொரோனா வைரஸ் நெருக்கடி மத்தியிலும் சிவ்ராஜ் சிங் தனி ஆளாக மாநிலத்தை நிர்வாகம் செய்து வந்தார்.

கொரோனா வைரஸ்

நெருக்கடியான சூழ்நிலையில் மாநிலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த சுகாதாரம் மற்றும் உள்துறைகள் அமைச்சர்கள் இல்லாமல் செயல்பட்டதை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன. ஆனால் பா.ஜ.க. அதனை கண்டு கொள்ளவில்லை. லாக்டவுன் முடிந்த பிறகு மத்திய பிரதேச அமைச்சர்கள் நியமனம் குறித்து முடிவு செய்து கொள்ளலாம் என பா.ஜ.க. தலைமை முடிவு செய்து இருந்தது. அதனால் மத்திய பிரதேச அமைச்சரவை விரிவாக்கம் தள்ளிபோனது. 

பா.ஜ.க.

தற்போது லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளதால்,  இதற்கு மேலும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யாமல் இருப்பது நல்லதல்ல என்பதை பா.ஜ.க. உணர்ந்தது. இதனையடுத்து மத்திய பிரதேச மாநில அமைச்சரவை விரிவாக்கத்துக்கு பா.ஜ.க. தலைமை ஒப்புதல் அளித்துள்ளது. இன்று அம்மாநில அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி மத்திய பிரதேசத்தில் கொரோன வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,500ஐ தாண்டி விட்டது.