ஒரு பொண்ண பாத்ததுமே அவள தூக்கிட்டு போய் ரேப் பண்ற தைரியம் எங்களுக்கு இருக்கு: நடிகர் விஷால் ஆவேசம்!

 

ஒரு பொண்ண பாத்ததுமே அவள தூக்கிட்டு போய் ரேப் பண்ற தைரியம் எங்களுக்கு இருக்கு: நடிகர் விஷால் ஆவேசம்!

நடிகர் விஷால்,  ராஷி கண்ணா நடிப்பில் உருவாகியுள்ள அயோக்யா படத்தின் டிரைலர் வெளியாகி டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. 

சென்னை:  நடிகர் விஷால்,  ராஷி கண்ணா நடிப்பில் உருவாகியுள்ள அயோக்யா படத்தின் டிரைலர் வெளியாகி டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. 

 

நடிகர் விஷால் ‘சண்டக்கோழி 2’ படத்தை அடுத்து அயோக்யா படத்தில் நடித்து வருகிறார். லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் மற்றும் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராகப் பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்கியுள்ளார்.  இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். அதுமட்டுமின்றி முக்கிய கதாபாத்திரங்களில் பார்த்திபன், எம்.எஸ்.பாஸ்கர், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைக்கும் இந்தப் படம் தெலுங்கில் வெளியான ‘டெம்பர்’படத்தின் ரீமேக்காகும். 

ayogya

இந்தப் படத்தில் போலீஸாக நடிக்கிறார் விஷால்.  இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். அதில், கையில் பீர் பாட்டிலுடன் போலீஸ் ஜீப் மீது விஷால் அமர்ந்திருப்பது போல் போஸ்டர் வெளியானது. இதற்கு கண்டனம் தெரிவித்த பாமக நிறுவனர் ராமதாஸ், ‘பீர் பாட்டிலுடன் நடிகர் விஷால் தோன்றும் விளம்பரமும், முதல் சுவரொட்டியும் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும். நடிகர் சங்க பொதுச்செயலாளரிடமிருந்து சமூக அக்கறையை எதிர்பார்க்கிறேன்!’ என்று குறிப்பிட்டிருந்தார்.

 

இந்நிலையில் அயோக்யா படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. அதில், ஓப்பனிங்கில் பீர் பாட்டிலுடன் ஆண்டவன் படைச்சான், என்கிட்ட கொடுத்தான் அனுபவி ராஜான்னு அனுப்பி வச்சான்’ என்ற பாடலுடன் தள்ளாடுகிறார் விஷால்.  ஆக்க்ஷன், காமெடி, ரொமான்ஸ் என கலவையாக அமைந்துள்ள இந்த படத்தின் டிரைலரின் இறுதியில், “ஒரு பொண்ண பாத்ததுமே அவள தூக்கிட்டு போய் ரேப் பண்ற தைரியம் எங்களுக்கு இருக்கு; உங்களால தண்டனை கொடுக்க முடியுமா? என்று நீதி மன்றத்தில்  கேள்வி கேட்பதுபோல் காட்சி வருகிறது .

கண்டிப்பாக இது சமூகம் சார்ந்த கருத்துக்களை முன்னிறுத்தும் படியான படமாக  இருக்கும் என்று தோன்ற வைத்தாலும்,முன்னணி ஹீரோ ஒருவரே இப்படி டயலாக் பேசியிருப்பது பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது! 

இதையும் வாசிக்க: 12வது ஆண்டு திருமண நாள்: உலக அழகிக்கு அபிஷேக் பச்சன் கொடுத்த சர்ப்ரைஸ் இது தான்?