“ஒரு பக்கெட் தண்ணிக்கு எப்படி சண்டை போடுவோம்; பொண்ணுங்களுக்கு சக்தி இல்லன்னு சொல்லதீங்க” : நடிகை வரலட்சுமி சரத்குமாரின் வீடியோ!

 

“ஒரு பக்கெட் தண்ணிக்கு எப்படி சண்டை போடுவோம்; பொண்ணுங்களுக்கு சக்தி இல்லன்னு சொல்லதீங்க” : நடிகை வரலட்சுமி சரத்குமாரின் வீடியோ!

கதாபாத்திரம் மட்டுமின்றி வில்லி கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடித்து பாராட்டுகளைப் பெற்றுவருகிறார்.

தமிழ் சினிமாவில் போடா போடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். அதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்து பிரபலமான இவர் கதாநாயகி கதாபாத்திரம் மட்டுமின்றி வில்லி கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடித்து பாராட்டுகளைப் பெற்றுவருகிறார்.

 

 

  இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சர்கார், மாரி 2 படங்கள் வெற்றியானதையடுத்து தற்போது  கன்னி ராசி, ரணம், வெல்வெட்  நகரம், காட்டேரி  போன்ற படங்கள் வெளிவர தயாராகவுள்ளது. அதே சமயம் நடிப்பு மட்டுமல்லாது பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும்  விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். 

இந்நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் மகளிர் தினத்தை முன்னிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘ஹாப்பி வுமன்ஸ் டே அப்படினு நான் சொல்லுவீங்கன்னு நீங்க எதிர்பார்த்தீங்க. ஆனா நான் சொல்ல மாட்டேன். என்ன பொறுத்தவரைக்கும் எல்லா நாட்களும் மகளிர் தினம் தான். இன்னைக்கு ஒருநாள் மட்டும் சொல்லிட்டு, அடுத்த நாள் நியூஸ் பேப்பரை பார்க்கும் போது கொலை, பாலியல் வன்கொடுமை இதெல்லாம் பார்க்கும் போது  ரொம்பவே வருத்தமா இருக்கு.  ஹாப்பி இல்லாம ஹாப்பி  வுமன்ஸ் டே கொண்டாடுறோம். நம்ம ஆண்களுக்கு சமமாக இருக்கனும். இங்க இருக்குற போலீஸ், சட்டம் இதெல்லாம் நம்பி பிரயோஜனம் இல்ல. நம்ம நம்மள தான் பாத்துக்கணும். வீட்டிலிருந்து வெளியில் போகும் போது  தைரியமா இருங்க. எப்பவுமே  பெப்பர்  ஸ்ப்ரே, மிளகாய் தூள் இதெல்லாம் வச்சிக்கோங்க. ஒரு  பிரச்னைன்னு வந்தா முதல்ல நம்ம தான் ஃபேஸ்  பண்ணும். ஒரு பக்கெட் தண்ணிக்கு எப்படி சண்டை போடுவோம். அதனால பெண்களுக்கு சக்தி இல்லன்னு சொல்லாதீங்க. பெண்ணா பிறந்ததுக்கு பெருமைபடுங்க. உங்களை நீங்களே பாரமா நினைக்காதீங்க. நான் ஹாப்பி வுமன்ஸ் டே  சொல்லமாட்டேன். எல்லா நாளும் உங்களை நீங்களே கொண்டாடுங்க’ என்று கூறியுள்ளார்.