ஒரு நிமிடம் மட்டுமே நடந்த அயோத்தி வழக்கு விசாரணை… 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

 

ஒரு நிமிடம் மட்டுமே நடந்த அயோத்தி வழக்கு விசாரணை…  10-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான மேல் முறையீட்டு வழக்கு ஜனவரி 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

டெல்லி: அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான மேல் முறையீட்டு வழக்கு ஜனவரி 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை நிா்மோஹி அஹாரா, ராம் லல்லா (ஹிந்து அமைப்புகள்), சன்னி வக்பு வாரியம்(இஸ்லாமிய அமைப்பு), ஆகிய அமைப்புகள் மூன்றாகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என, அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதற்கிடையே இந்த மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் கடந்த வருடம் செப்டம்பா் 27-ம் தேதி அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமா்வு விசாரணை நடத்தியது. அப்போது ஆதாரங்கள் அடிப்படையில் நிலத்தின் உரிமை குறித்து புதிய அமா்வு அக்டோபா் 29-ம் (2018-ம் ஆண்டு)தேதி முடிவு செய்யும் என்று தெரிவித்தனர். மேலும் அயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் நிராகரித்தனர். 

இதனையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு தொடர்பான விசாரணை 2019-ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கும் என அறிவித்தது. 

அதன்படி இந்த வழக்கு மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது, ஒரு நிமிடம் மட்டுமே வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.கவுல் அமர்வு வழக்கு விசாரணையை புதிய அமர்வுக்கு மாற்றி வரும் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.