ஒரு குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி- தெலங்கான முதல்வர் அதிரடி!

ஒரு குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி- தெலங்கான முதல்வர் அதிரடி!

தான் பிறந்த கிராம மக்களுக்கு சிறப்பு நிதியை தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர்ராவ் அறிவித்துள்ளார்.

சித்தபேட் மாவட்டத்திலுள்ள சிந்தமடகா கிராமத்தில் தான் தெலங்கான முதலைமைச்சர் சந்திர சேகர் ராவ் பிறந்தார். அங்கு மொத்தம் 2 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. அங்குள்ள குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதி உதவியை உடனடியாக வழங்க சொல்லி சந்திர சேகர்ராவ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தான் பிறந்த கிராம மக்களுக்கு சிறப்பு நிதியை தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர்ராவ் அறிவித்துள்ளார்.

telagana cm

சித்தபேட் மாவட்டத்திலுள்ள சிந்தமடகா கிராமத்தில் தான் தெலங்கான முதலைமைச்சர் சந்திர சேகர் ராவ் பிறந்தார். அங்கு மொத்தம் 2 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. அங்குள்ள குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதி உதவியை உடனடியாக வழங்க சொல்லி சந்திர சேகர்ராவ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தான் பிறந்த கிராம மக்களுக்கு உதவ வேண்டியது தன் கடமை என்றும் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு குறித்து இதுவரை அரசு ஆணையோ அல்லது திட்ட ஆவணமோ வெளியிடப்படவில்லை. மாறாக அந்த கிராமத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அறிவித்துள்ளார். இதற்காக ரூ. 200 கோடி செலவிடப்படவுள்ளதாகவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

telagana cm

அந்த கிராமத்தில் உள்ள நிறைய மக்கள் கடனில் உள்ளதை நான் அறிவேன் எனக்கூறிய சந்திர சேகர்ராவ், என் அன்பின் அடையாளத்தையும், எனக்கும் இந்த ஊருக்குமான சொந்தம் என்ன என்பதை மக்களுக்கு உணர்த்தவே இந்த முடிவை அறிவிப்பதாக தெரிவித்தார்.

நான் கொடுக்கும் இந்த பணத்தை வைத்துக்கொண்டு கிராம மக்கள் கோழிப்பண்ணையோ, பால் பண்ணையோ அமைக்கலாம். அல்லது விவசாயிகள் ட்ராக்டர், அறுவடை இயந்திரங்கள் வாங்கலாம். அல்லது சிறு தொழில் கூட மக்கள் தொடங்கலாம். மேற்கண்ட அனைத்தும் விரும்பாதவர்கள் ஆட்டோ, வாங்கி அதன்மூலம் வருமானம் ஈட்டலாம் என்று சந்திர சேகர்ராவ் தெரிவித்தார்.