ஒரு கிலோ வெங்காயம் 22 ரூபாய்க்கு கொடுக்கிறோம்……கைவசம் 16 ஆயிரம் டன் இருக்கு….. மத்திய அமைச்சர் தகவல்…..

 

ஒரு கிலோ வெங்காயம் 22 ரூபாய்க்கு கொடுக்கிறோம்……கைவசம் 16 ஆயிரம் டன் இருக்கு….. மத்திய அமைச்சர் தகவல்…..

மாநில அரசுகளுக்கு ஒரு கிலோ வெங்காயம் 22 ரூபாய்க்கு கொடுக்கிறோம். இன்னும் 16 ஆயிரம் டன் இறக்குமதி வெங்காயம் கைவசம் இருக்கு என மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் வெங்காயம் சாகுபடி செய்யப்படும் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் எதிர்பாராத மழை காரணமாக வெங்காய பயிர்கள் கடுமையாக சேதம் அடைந்தன. உற்பத்தி குறைந்ததால் சந்தைக்கு வரத்து குறைந்து வெங்காயத்தின் விலை கிடுகிடுவென ஏற்றம் கண்டது. ஒரு சமயத்தில் ஒரு கட்டத்தில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.200வரை விற்பனையானது. இதற்கிடையே விலை உயர்வை மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. வெளிநாடுகளிலிருந்து வெங்காய இறக்குமதி செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டது. இறக்குமதி வெங்காயம் சந்தைக்கு வந்ததையடுத்து அதன் விலை குறைய தொடங்கியுள்ளது.

ராம் விலாஸ் பஸ்வான்

இது தொடர்பாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: மத்திய அரசு 18 ஆயிரம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்துள்ளது. ஒரு கிலோ 22 ரூபாய் என்ற விலையில் வெங்காயம் மாநில அரசுகளுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் இதுவரை 2 ஆயிரம் டன் வெங்காயமே விற்பனையாகி உள்ளது.

வெங்காய மண்டி

வெங்காயம் கிடைக்க  அனைத்து முயற்சிகளையும் அரசு எடுக்கும் வகையில் நான் எப்போதும் தொடர்ந்து பராமரித்து வருகிறேன். வெங்காயத்துக்கான போக்குவரத்து செலவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் மற்றும் லாபம் மற்றும் நஷ்டம் இல்லா கொள்கையில் செயல்படுகிறோம். இதுவரை ஆந்திர பிரதேசம், தெலங்கானா, கேரளா, உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மத்திய அரசிடமிருந்து வெங்காயத்தை கொள்முதல் செய்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.