‘ஒரு கதை சொல்லட்டுமா சார்’: ஹிந்தியில் பிரமாண்டமாக ரீமேக்காகும் விக்ரம் வேதா!

 

‘ஒரு கதை சொல்லட்டுமா சார்’: ஹிந்தியில் பிரமாண்டமாக ரீமேக்காகும் விக்ரம் வேதா!

தமிழில் மாபெரும் ஹிட் கொடுத்த ‘விக்ரம் வேதா’ திரைப்படம் இந்தியில் ரீமேக்கவுள்ளது.  

‘ஒரு கதை சொல்லட்டுமா சார்’: ஹிந்தியில் பிரமாண்டமாக ரீமேக்காகும் விக்ரம் வேதா!

சென்னை: தமிழில் மாபெரும் ஹிட் கொடுத்த ‘விக்ரம் வேதா’ திரைப்படம் இந்தியில் ரீமேக்கவுள்ளது.  

தமிழில் கடந்த 2017ம் ஆண்டு விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரதா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘விக்ரம் வேதா’. புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

படம் வெற்றியடைய மிக முக்கிய காரணம் இரண்டு சிறந்த நடிகர்கள் ஒரே திரையில் எதிரும் புதிருமாக நடித்திருந்தது தான். இந்நிலையில், ‘விக்ரம் வேதா’ திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்த படத்தையும் தமிழில் இயக்கிய புஷ்கர் காயத்ரியே இந்தியில் இயக்கவுள்ளார். தற்போது இதில் அமீர்கான், சைஃப் அலிகான் ஆகியோர் நடிக்கவுள்ளனர். விஜய் சேதுபதியாக அமீர்கான், மாதவனாக சைஃப் அலிகான் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தைப் பற்றிய மற்ற அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.