ஒருவிரல் புரட்சி செய்த அரசியல் கட்சி தலைவர்கள்: புகைப்படங்கள் உள்ளே!

 

ஒருவிரல் புரட்சி செய்த அரசியல் கட்சி தலைவர்கள்: புகைப்படங்கள் உள்ளே!

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குபதிவில் அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் தங்கள் வாக்கை பதிவு செய்தனர். 

#Lok SabhaElectionVoting நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குபதிவில் அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் தங்கள் வாக்கை பதிவு செய்தனர். 

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்கினைச் செலுத்தி வருகின்றனர். அதே போல் நடிகர்கள் அஜித், விஜய், ரஜினி, கமல் உள்ளிட்டவர்களும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முக ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட ஏராளமான அரசியல் பிரமுகர்களும் தங்கள் வாக்கினைப் பதிவு செய்தனர். 

இன்று ஜனநாயக கடமையை நிறைவேற்றிய அரசியல் பிரமுகர்கள்:

vijayakanth

  • சென்னை சாலிகிராமத்தில்  உள்ள வாக்குச்சாவடியில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தனது குடும்பத்துடன் வாக்களித்தார்.
  • மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சொந்த ஊரான கலிங்கப்பட்டியில்   தனது வாக்கைப் பதிவு செய்தார்.

ops

  • தேனி மாவட்டம், பெரியகுளம் செவன்த்டே பள்ளியில் நீண்ட வரிசையில் காத்திருந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாக்களித்தார்.
  • விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், அரியலூர் மாவட்டம் அங்கனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வாக்களித்தார்.

thiruma

  • தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சிதம்பரம் அருகே கீரப்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். 
  • அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது வாக்கை, பெசன்ட் நகர் வாக்குச்சாவடியில் பதிவு செய்தார். 

kanimozhi

  • சென்னை ஆழ்வார்பேட்டையில் திமுக வேட்பாளர் கனிமொழி தனது வாக்கைப் பதிவு செய்தார்.
  • முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி  மதுரை டி.வி.எஸ். நகர் தனியார் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்தார்.

anbumani

  • விழுப்புரம் திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் குடும்பத்துடன் வாக்களித்தார் அன்புமணி 
  • சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தனது மனைவி ஸ்ரீநிதி மற்றும் தனது தாயார்  நளினி சிதம்பரம் ஆகியோர் தங்களது வாக்கைப் பதிவு செய்தனர்.

tamilisai

  • சென்னை அடையாறு காமராஜர் அவென்யூவில் உள்ள மாநகராட்சி பள்ளியில் திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
  • பாஜக தமிழக தலைவரும், தூத்துக்குடி தொகுதி பாஜக வேட்பாளருமான தமிழிசை சென்னை சாலிகிராமத்தில் வாக்களித்தார்.

இதையும் வாசிக்க: பிரபல சின்னதிரை நடிகைகள் கார் விபத்தில் பலி: சோகத்தில் திரையுலகம்!