ஒருநாள் போட்டிகளுக்கு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் இனிமேல் இவர்தான்!

 

ஒருநாள் போட்டிகளுக்கு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் இனிமேல் இவர்தான்!

ஒருநாள் போட்டிகளுக்கான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் மாற்றப்பட்டுள்ளார்.

கேப் டவுன்: ஒருநாள் போட்டிகளுக்கான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் மாற்றப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பரிக்க அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடுத்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது. நான்காவது டெஸ்ட் போட்டி இவ்விரு அணிகளுக்கிடையே ஜன.24-ஆம் தேதி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறவுள்ளது.

de kock / ttn

இந்நிலையில், ஒருநாள் போட்டிகளுக்கான தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக குயின்டன் டி காக் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு இரு டி20 போட்டிகள் மற்றும் இரண்டு ஒருநாள் போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக இவர் விளையாடியுள்ளார். இதுவரை 115 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள டி காக், 14 சதங்கள் மற்றும்  24 அரைசதங்களுடன் மொத்தம் 4907 ரன்கள் அடித்துள்ளார். இவரது அதிகபட்ச ஸ்கோர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அடித்த 178 ரன்கள் ஆகும். முன்னதாக ஒருநாள் போட்டிகளுக்கு பஃப் டூ பிளிசிஸ் தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.